Saturday, December 31, 2011

கவுண்டமணி தொகுத்து வழங்கும் சிறந்த படங்கள் - 2011


Share/Bookmark
கவுண்டர் வீட்டுல காஃபி குடிச்சிகிட்டே கோவை சரளாகிட்ட பேசிகிட்டு இருக்காரு

"இத பார் செகப்பி இன்னிக்கு புது வருசம் பொறக்குது. இன்னிக்கு முழுசும் என் காதுல கேக்குறதெல்லாம் நல்ல வார்த்தையாவே இருக்கனும்... நல்ல விசயத்த மட்டும் தான் நா  பாக்கனும்"ண்ணு சொல்லி முடிக்கிறதுக்குள்ள

 "அண்ணே...." ன்னு செந்தில் கையில ஒரு chair ரோட நிக்கிறாரு...

கவுண்டர் :
"அய்யோ... எத இன்னிக்கு முழுசும் நா பாக்ககூடாதுன்னு நெனச்சனோ அது காலங்காத்தால என் கண்ணு முன்னாடி வந்து நின்னுருச்சி... புது வருசம்... ஓகோன்னு தான்"

செந்தில் : "எண்ணணே காப்பி குடிக்கிறீங்களா?"

கவுண்டர் : "இல்ல பினாயில்ல சக்கரை போட்டு குடிச்சிகிட்டு இருக்கேன்... வேணுமா?"

செந்தில் : "சக்கரை போட்டுருக்குள்ள.. அப்ப குடுங்க"

கவுண்டர் : "அதுசரி...அன்னிக்கு திங்கிறதுக்கு எதுவும் இல்லண்ணு எங்க வீட்டு ஆட்டு கல்லுல பாதிய கடிச்சி திண்ணுட்டு போனவந்தான நீ... பினாயிலயா குடிக்கமாட்ட.. ஆமா அது என்னடா கையில் chair oda வந்துருக்க?"

செந்தில் : "எங்க வீட்டுல கரண்டு போயிருச்சிண்ணே"

கவுண்டர் : "அதுக்கு எங்க வீட்டுல chair போட்டு உக்காந்து காத்து வாங்கிட்டு போகலாம்னு வந்தியாக்கும்..விட்டேன்னா பல்லு தெரிச்சிரும்...எங்க வீட்டுலயும் கரண்ட் இல்ல ஓடிப்போயிரு"

செந்தில் : "அட அது இல்லைண்ணே... எப்பவும் புது வருசத்தண்ணிக்கு டிவில டாப் 10 போடுவாங்க... இந்த தடவ பாக்க முடியல..அதான் உங்கள டாப் 10 போட சொல்லி பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

கவுண்டர் : எண்டா உனக்கு டாப் 10 சொல்லி உன்ன entertain பண்றதுக்கு நா என்ன கேபிள்  டிவியா? போடா வெஸ்டர்ன் டாய்லெட் மண்டையா..."

செந்தில் : அண்ணே.. நா கோவப்பட்டு சாபம் குடுத்தா பலிக்கும்னு உங்களுக்கு தெரியும்ல... அதுவும் இன்னிக்கு புது வருசம் வேற.. என்ன கோவப்படுத்துனீங்க... சாபம் விட்டுருவேன்"

கவுண்டர் :
அய்யோ... குட்டிமா நா சும்மா தமாசுக்கு சொன்னேன். நீ கோச்சிக்காத... உனக்கு என்ன இப்ப டாப் 10 சொல்லனும் அவளவுதானே.. இதோ சொல்றேன் (மனதிற்குள் : பிசாசுங்களுக்கே பயப்படாத நா இந்த காட்டு பன்னிக்கு பயப்பட வேண்டியிருக்கே. செரி சமாளிப்போம்...)அந்த
chair ah இப்புடி போடு....

செந்தில் : ஹ்ம்ம்..அப்புடி வாங்க வழிக்கு.. அண்ணி இப்புடி வந்து உக்காருங்க.. அண்ணனோட டாப் 10 பாப்போம்.. அண்ணேன்.. நல்லா கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு சொல்லுங்க. அப்பதான் டிவில பாக்குற மாதிரியே இருக்கும்..

கவுண்டர் :
ஏன் கால் மேல கை போட்டு சொன்னா பாக்க மாட்டியா... ரொம்ம பேசுன உன் வாய் மேல தான் கால போடுவேன் மூடிட்டு உக்காந்து பாருடா

எல்லாருக்கும் வணக்கமுங்க.. இந்த காட்டு பன்னி சொன்னதால நா இந்த டாப் 10 தொகுத்து வழங்கலாம்னு வந்துருக்கேனுங்க...

10. இந்த பத்தாவது எடத்து புடிச்சிருக்க படம் பேரு வக்காளி... த ச்சி... போராளி. நம்ம சசிகுமார் நடிச்சி சமுத்திரக்கணி எடுத்ததுங்க.. இடைவேளை வரைக்கும் படம் சூப்பரோ சூப்பர். ஆனா அதுக்கப்புறம் கொஞ்சம் தம் கட்டனும்ங்க.. இல்லண்னா இன்னும் கூட முன்னாடி வந்துருக்கும்ங்க
9. ஒன்பதாவது எடத்த புடிச்சிருக்க படம் பயணம்.. ஒரு ஏரோ ப்ளேன நாலு அஞ்சி உல்மா போட்ட தீவிரவாதிங்க கடத்திருராங்க.. அத நல்ல குஜால்டியா எடுத்துருந்தாங்க... நா கூட அந்த பேசஞ்சர காப்பத்த நம்ம கேப்டன் வருவாருன்னு ஒரு ஆவலோட இருந்தேன்... ஆனா லோக்கல் பாய் நாகார்ஜூனே வந்து காப்பாத்திட்டான்.. i'm upset8.எட்டாவது எடத்துல இருக்குறது தெயவ திருமகள்.. இந்த படத்த பாத்துட்டு என் செகப்பி தேம்பி தேம்பி அழுக.... அவள பாத்துட்டு நா அழுக.... எங்க ரெண்டு பேர பாத்துட்டு தியேட்டரே எதுக்கு அழறோம்னு தெரியாமயே அழுதுகிட்டு இருந்தாங்கப்பா... அந்த எடத்துலயும் இந்த காட்டு பன்னி சுண்டல்ல உப்பு இல்லைன்னு தியேட்டர் காரண்ட சண்ட போட்டுகிட்டு இருந்தான்யா7. எழாவது எடத்துல இருக்க படம்... கல்பனா...

(செந்தில்: அய்யோ அண்ணே.. அது காஞ்சனா)

அட ரெண்டும் ஒண்ணுதானப்பா.. அதுவும் லேடீஸ் பேரு தான்... இதுவும் லேடீஸ் பேருதான்... கொழப்புறானுகளே... இந்த படத்துல ஒரு பேயி வந்து பயமுறுத்திகிட்டே இருந்துச்சி... எல்லாரும் தியேட்டர்ல பயந்துட்டாங்க... ஆனா நா பயப்படல.. ஏன் தெரியுமா..அதே மூஞ்ச நா தினமும்  பாத்து பழகிட்டேன்...

(செந்தில்: அப்புடியா யாருண்ணே அது)

கண்ணாடில போய் பார்ரா.. யாருண்ணு தெரியும்...
6. ஆறாவது எடத்துல இருக்க படம் கோ.

(செந்தில்: கோ கோ கோ கோ கோலீகே பீச்சே கியாஹே... கோலீகே பீச்சே)

கவுண்டர் :  ஆமா கோலீகே பீச்சே க்யாகே... ட்ராவிட்கே நீச்சே கியாகே
நீங்க எல்லாம் அப்புடியே ஒரு பிரேக் பொயிட்டு வாங்க.. நா இந்த நாய நாலு மிதி மிதிச்சிட்டு
வந்துடுறேன்...


 
5. எல்லாம் ப்ரேக் பொயிட்டு வந்துருப்பீங்கன்னு நெனக்கிறேன்.. இப்ப இந்த அஞ்சாவது எடத்த கடிச்சிருக்கது ச்சி புடிச்சிருக்கது சிறுத்தை... நம்ம கார்த்தியும் சந்தானமும் காமெடில கலக்கலோ கலக்கல்.. 2.30 அவர்ஸ் புல் எஞ்சாய்மெண்ட்.. ஆனா இந்த சந்தானம் நாயி  நம்மளயே பாலோ பண்ணிகிட்டு  இருக்கு... அதுக்கு ஒரு நாளைக்கு இருக்கு..
4. நாலாவது எடத்துல இருக்க படம் எங்கேயும் எப்போதும்.. நல்லா போயிகிட்டு இருந்த படத்துல ரெண்டு பஸ்ஸ மோதவச்சி பல பேர சாவடிச்சிடுறாங்க.. அதான் i'm கொஞ்சம் கடுப்பாயிட்டேன்,.... அந்த பஸ்ல இந்த நாய ஏத்தி அனுப்பிருக்கனும்... கொஞ்சம் மிஸ் ஆயிருச்சி இந்த படத்துக்கு விமர்சனம்னு இவன் எதோ எழுதிருக்கான்... முடிஞ்சா படிங்க.. இல்லண்ணா வெடிங்க..  கொஞ்சம் சங்கீதம் கொஞ்சம் சந்தோஷம்


3. மூணாவது எடத்துல இருக்க படம் மயக்கம் என்ன... தம்பி செல்வராகவன் அருமையா எடுத்துருந்தாரு... அந்த மூஞ்சிக்கு இந்த மாதிரி படம் தான் எடுக்க வரும்... இனிமே இந்த ஆயிரத்தில் ஒருவன் ஐயாயிரத்தில் ஒருவன்னு எதாவது ஆரம்பிச்சான் i'm டென்ஷனாயிருவேன்.2. ரெண்டாவது எடத்த புடிச்சிருக்கதும் நம்ம தனுஷ் தம்பி படம் தான்... ஆடுகளம்.. இந்த  பருத்திவீரன் கார்த்தி மாதிரி மதுரை தமிழ் பேசி கொல்லாம,  கேக்குற மாதிரியான good மதுரை தமிழ் பேசிருந்தாரு. அதுவும் அந்த ஹீரோயின் டாப்ஸி.. ஆல் யங் கேர்ஸ்... ஐ லைக் இட்...1. இப்போ நீங்க ஆவலோட எதிர்பாத்த முதல் இடம்... மங்காத்தா....

(செந்தில் : ஹை... 'தல' நடிச்ச படம்)

ஏன் மத்த எடத்துல எல்லாம் தலய கழட்டி வச்சிட்டு முண்டம் மட்டும் தான் நடிச்சிட்டுருக்கா... முனுசுபாலிட்டி வாயா...இந்த படத்துக்கு மொத எடம் குடுக்கலன்னா அதுக்கு சண்ட போடுறதுக்குன்னு சில பேரு காத்துக்கிட்டு இருப்பாய்ங்க.. எஞ்சாய்............... விமர்சனம்- Venkat & Yuvan's Game
கவுண்டர் : டேய் விஜய் மண்டையா... போதுமல்ல... அப்புடியே ஒடிப்போயிரு...

செந்தில் :
அண்ணேன் இன்னும் ஒண்ணே ஒண்ணு பண்ணனும்னே...

கவுண்டர் : என்ன?

செந்தில் : அப்புடியே டாப் 10 பாடல்களூம்சொல்லிட்டீங்கண்ணா நல்லாருக்கும்...

கவுண்டர் : இவ்வளவு தானா... இதோ இப்ப சொல்லிருவோம்... செகப்பி .. அந்த கதவ லைட்டா பொத்துனாப்புல சாத்து......

செந்தில்: ஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

18 comments:

Kumaran said...

ரொம்ப நல்லா கற்பனை செய்து ஒரு நல்ல பதிவாக திரைப்பங்களை நங்கு வரிசைப்படுத்தி தந்துள்ளீர்கள்.எனக்கு கவுண்டமணி செந்தில் - ந ரொம்ப பிடிக்கும்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

Mohamed Faaique said...

காவலன், வேலாயுதம்’னு 2 படம் வந்திச்சாமே!!! ஹி..ஹி.. இத நான் கேக்கல்ல.. செந்தில்’தான் கேக்க சொல்லுராரு...

அனுஷ்யா said...

வாகை சூட வா மிஸ்ஸிங் அண்ணே... நல்லா படம் கொஞ்சம் கரிசனம் காட்டியிருக்கலாம்..

karthikkumar said...

//ஆறாவது எடத்துல இருக்க படம் கோ.

(செந்தில்: கோ கோ கோ கோ கோலீகே பீச்சே கியாஹே... கோலீகே பீச்சே)
//

ithu sema machi..//எழாவது எடத்துல இருக்க படம்... கல்பனா.//

:)))))
happy new year siva.

Anonymous said...

super top 10 boss, i like it

முத்துசிவா said...

@Kumaran"

thanks boss :)

முத்துசிவா said...

//காவலன், வேலாயுதம்’னு 2 படம் வந்திச்சாமே!!! ஹி..ஹி.. இத நான் கேக்கல்ல.. செந்தில்’தான் கேக்க சொல்லுராரு... //

அந்த நாயிக்கு படம் வந்ததே பெருசு... இதுல டாப் 10ல வேற வரனுமா... அடுத்த வாரம் சிறந்த காமெடி படம்னு ஒரு கவுண்டவுன் போடுறேன்.. அதுல சேக்கமுடியுதா
பாக்கலாம்..

இது நா சொல்லலீங்க.. தல கவுண்டர்தான் சொல்லிருக்காரு :)

முத்துசிவா said...

thanks karthik :)

முத்துசிவா said...

Happy New year !!!!!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

கலக்கலான கற்பனை ... கலக்கீட்டீங்க.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

karank140 said...

dei, baadu pasangalaaa, nee ajith fan-naa. naan soldren, SEDHIL-KKU PIDITHTHA 10 FILM.
1.AEGAN.
2.JI.
3.AZHWAR.
4.ANCHANEYA.
5.JANA.
6.GREEDAM.
7.ASAL.
8.RAJA.
9.RED.
10.BILLA. DEI,porambokku, ivanukku oru dance, comedy, romance,fight oru idhuvum varaadhuuu. idhoda niruththikko. illanaa next time ajith paththi innum asingamaa varum... by vijay fans

Senthil Ammu said...

waste ........

முத்துசிவா said...

@karank140:

வாங்க மிஸ்டர் பண்ணாடை.. என்ன ரொம்ப நாளா ஆள காணும்?

ஏண்டா நீ விஜய் ரசிகன்குற பேர்ல நீ
கமெண்டு போட்டா நாங்க நம்பிருவோமா? நா போட்டுருக்க போஸ்டுக்கும் நீ போட்டுருக்க கமெண்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? நீ எந்த பேர்ல கமெண்ட் போட்டாலும், பாடி சோடாவ
follow பன்ற கொண்டை மாதிரி, நீ யூஸ் பண்ற language லருந்தே நீ யார்னு தெரிஞ்சி போயிடுது. மரியாதையா ஓடிரு...

முத்துசிவா said...

ஏண்டா நாயே அடுத்தவங்க அம்மாவல்லாம் பத்தி தப்பா பேசிட்டு இவுங்க அம்மாவுக்கு உத்தம ராசாவாட்டம்கடிதம் எழுத ஆரம்பிச்சிருவாரு... வெக்கம் கெட்டவனே... எனக்கு நீ போட்ட கமெண்ட்ட திரும்ப நா உனக்கு
போட்டேன்னு நெனச்சிக்கோ....

சேகர் said...

நல்ல கற்பனை..

சமுத்ரா said...

ரொம்ப நல்லா கற்பனை செய்து வரிசைப்படுத்தி தந்துள்ளீர்கள்.எனக்கு கவுண்டமணி செந்தில் ரொம்ப பிடிக்கும்..நன்றி

Unknown said...

dei muthu siva porambokku,, nee ajith porambokku fan-naa irundhaa ajith-ah pathi mattum eludhu, vijay pathi ennadaa mayiru nee eludhuradhu,, adhaan ippa vechaanga illa billa-2 utter flop in 2012,, dei andha ajith porambokka modhalla andha coat,gun,glass-ah kalatta sollu daa, apparam padam odum,, modhalla continues-ah 2 padam hit kodukka theriyala nee ellam ajak fan-ah sorry ajith fan-ah..

Unknown said...

dei muthu siva porambokku,, nee ajith porambokku fan-naa irundhaa ajith-ah pathi mattum eludhu, vijay pathi ennadaa mayiru nee eludhuradhu,, adhaan ippa vechaanga illa billa-2 utter flop in 2012,, dei andha ajith porambokka modhalla andha coat,gun,glass-ah kalatta sollu daa, apparam padam odum,, modhalla continues-ah 2 padam hit kodukka theriyala nee ellam ajak fan-ah sorry ajith fan-ah..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...