Friday, February 20, 2015

முருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு நிறைய சந்தோஷத்தையும் நிறைய கவலையும் ஒரே நேரத்துல குடுக்குறது காலேஜ் ஃபைனல் இயரோட கடைசி ரெண்டு மாதங்கள் தான். காலேஜ விட்டு வரும்போது நமக்கு கண்ணுல ஒரு சொட்டு கண்ணீராவது வரும். அடுத்தவங்க பாத்தா அண்ணனோட கெத்து போயிரும்டா” ன்னு பேக்சாட்ல திரும்பி நின்னு “உனக்கு எதோ ட்ரான்ஸராம்லம்மா..” ங்குற மாதிரியாவது கண்டிப்பா எல்லாரும் அழுதுருப்பாய்ங்க. அப்டி இல்லைன்னா  நிச்சயம் நாம எதையோ மிஸ் பண்ணிட்டோம்னு தான் அர்த்தம். அப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையோட கடைசி சில பக்கங்கள்ள எழுதப்பட்ட வரலாறத்தான் இன்னிக்கு கொஞ்சம் திருப்பி பாக்கப்போறோம்.

”மச்சி, காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு செம்மையா எஞ்ஜாய் பண்றோம்.. எஞ்ஜாய் பண்றோம்.. வாங்கஜி.. வாங்கஜீ” ன்னு ஒருபக்கம் ஒருத்தன் சொல்லிட்டு இருக்கும் போதே இன்னொருத்தன் சைடுல “மச்சி இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கா?” ம்பான். மொத்த கூட்டமும் சைலண்ட் ஆயிரும். திடீர்ன்னு இன்னொருத்தன் சொல்லுவான். “மச்சி.. காலேஜ் முடிஞ்சா என்ன மச்சி. நாம சென்னையில வார வாரம் மீட் பண்றோம். ஊர் சுத்துரோம்… படத்துக்கு போறோம்.. ஜாலி பண்றோம்” ம்பான். அதாவது அவரு நம்மள சோகத்துலருந்து மீட்டு சமாதானப்படுத்தி ஜாலியாக்குறாராம்.

அப்புடி வார வாரம் மீட் பண்றோம்னு சொன்ன பல பேர நாம கடைசியா காலேஜ் முடியிற அன்னிக்கு தான் பாக்கமுடியும். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அவன் ஆள் அட்ரஸே இருக்காது. அப்பப்போ ஃபேஸ்புக்குல மட்டும் அமெரிக்காவுல ஸ்நோவ கையில அள்ளிக்கிட்டு நிக்கிற மாதிரி சிலப்பல ஃபோட்டோக்களை பாக்கலாம்.  

சில வருஷங்களுக்கு அப்புறம் திடீர்னு அவன்கிட்டருந்து நமக்கு ஒரு ஃபோன் வரும். உடனே “அடேய் நண்பா.. எங்கேயடா இருந்தாய் என் செல்வமே.. பாசத்துல என்னை மிஞ்சினவனா இருக்கியே” அப்டின்னு நாம பாசத்துல பொங்கிரக்கூடாது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம கல்லூரி நண்பன் ஃபோன் பன்னான்னா, அவனுக்கு வீட்டுல ஒரு நல்ல பொண்ணா பாத்துருக்காய்ங்க. அதுக்கு கல்யாணத்துக்கு நம்மள கூப்டத்தான் ஃபோன் பண்ணிருப்பான்னு நாமளா மேட்டர கவ்விக்கனும். அப்டி நடந்தா டக்குன்னு ஃபோன எடுத்து “எப்ப மச்சி கல்யாணம்?”ன்னு தைரியமா கேக்கலாம்.

இவய்ங்க கூட பராவால்ல. இன்னும் ஒரு கேட்டகிரி இருக்காய்ங்க. திடீர்னு ஒரு நாள் ஆஃபீஸ் வாழ்க்கையை வெறுத்து, மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாத்து ”காலேஜ்ல நாம எப்டியெல்லாம் இருந்தோம். இங்க நம்மள இப்டி வேலை பாக்க சொல்றாய்ங்களே”ன்னு பழைய நினைவுகளை கரண்டிய வச்சி கிண்டும்போது, திடீர்ன்னு நம்ம பழைய நண்பனோட நினைப்பு வந்து கால் பண்ணுவோம்.

அப்போ அவன் கேப்பான் பாருங்க ஒரு கேள்வி. “என்ன மச்சி காலேஜ் முடிச்சப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குற. இப்பதான் எங்க நினைப்பெல்லாம் வருதா?” ம்பான். “இப்ப கூட அந்த நாயிக்கு நாம தான் கால் பண்ணிருப்போம். ஆனா அது நம்மள என்ன மச்சி காலே பண்ணலன்னு கேக்கும். அதாவது அவரு நம்ம நினைப்பாவே இருந்தா மாதிரியும் நம்ம கால் பண்ணாததால தான் அவரு இவ்வளவு நாளா பேசாத மாதிரியும் தான் ஒரு சீனப் போடுவய்ங்க. சரி.. நண்பர்கள் பலவிதம்.

கல்லூரியோட கடைசி நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது தான் வந்துச்சி அந்த கல்ச்சுரல்ஸ். வழக்கமா அடுத்தவய்ங்க நடத்துவாய்ங்க. நாம போய் உரண்டை இழுப்போம். இப்போ நாமதான் சீனியராமே.. நம்மதான் நடத்தனுமாமே. இதுல கொடுமை என்னன்னா காலேஜோட கல்சுரல் co-ordinator நம்ம அபிநய சரஸ்வதி சம்பந்தம். எங்க சீனியருங்களுக்கே பர்மிஷன் குடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சி, அதுக்கப்புறம் அவனுங்க ரெண்டரை நாள் கெஞ்சி வாங்கி கல்ச்சுரல்ஸ நடத்துனாய்ங்க.

அவங்களுக்கே இந்த கதின்னா, நம்ம பயலுக போன வாரம் நடந்த sports meet la தான் ”சூடான பருத்திப்பால்.. சூப்பரான ஆட்டுப்பால்”னு ரைமிங்கா அவர அசிங்க அசிங்கமா திட்டிக்கிட்டு வந்தாய்ங்க. அதுமட்டும் அந்தாளுக்கு கேட்டிருந்தா, பர்மிஷன் கேட்டு போறவிங்கள செருப்புலஅடிச்சி பத்தி விட்டுருவாரே. என்ன செய்யலாம்? ”saar… want money saar… saar help saar” ன்னு மரியான் தனுஷ் பாணியில “சார் last year saar.. கடைசி 20 days saar.. இதுக்கப்புறம் வாழ்க்கையில no fun saar… pls help saar” ன்னு ஏதேதோ சொல்லி பசங்க பர்மிஷன் வாங்கிட்டாய்ங்க.

பர்மிஷன் வாங்கியாச்சு. இனிமேதான் மெயின் ஆப்பே இருக்கு. நம்ம வேற ஃபைனல் இயரு. இதுக்கு முன்னால ஃபைனல் இயர் டீமோட கல்சுரல் பர்மார்மன்ஸ பாத்தவிய்ங்க, நம்மக்கிட்ட பெர்பார்மன்ஸ் வேற ஹெவியா எதிர்பார்ப்பாய்ங்க. நம்ம சோ தான் நல்லாருக்காதேடா.. அய்யயோ… அமைச்சரே நன்றாக மாட்டிக் கொண்டோமைய்யா… ஜூனியர் பசங்க ஆடுறதையும் பாடுறதையும் பாக்கும்போது அவய்ங்க எதோ நல்ல மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டு இருப்பாய்ங்க போலருக்கு.

ஆனா நம்ம இயர்ல எப்புடித்தேடுனாலும் கடைசில நம்ம லியோபால் மாஸ்டரோ இல்லை ACP பரத் குமார் மாஸ்டரோதான்  நம்ம பசங்களுக்கு கொரியோகிராஃப் பன்னுவாய்ங்க. இவய்ங்கள நம்பி காம்பெடிஷன்ல இறங்குனா அடி பின்னிருவாய்ங்களே. இந்த மாதிரி ஃபைனல் இயரோட கெளரவத்தை பாதிக்கிற சில காரணிகளை ஆரய்ஞ்சி  பாத்தப்புறம் சங்கம் ஒரு முடிவெடுத்துச்சி. அந்த முடிவுப்படி “ஃபைனல் இயர் பசங்க எல்லா பர்மார்மென்ஸூம் குடுப்பாங்க. ஆனா எங்களுக்கு பரிசுகள் மேல் ஆசை இல்லை.  அந்தப் பரிசுகளையெல்லாம் எங்களோட தம்பிகளான எங்கள் ஜுனியர் பசங்களுக்கே பிரிச்சி குடுத்துருங்க. நாங்க குடுக்குறது எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும்தான்” அப்டின்னு ஒரு அறிக்கைய விட்டோம்.

எதாவது ஒண்ணு ரெண்டு கெஸ்ட் அப்பியரன்ஸ்னா பசங்க நம்புவாய்ங்க. ஆனா பண்ற எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ்னா எவனாச்சும் நம்புவானா.. சரி சமாளிப்போம். கல்சுரல்ஸூம் ஆரம்பிச்சிச்சி. சம்பந்தம் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை விட்டுருந்தாரு. (பின்வரும் வாக்கியத்தை காட்ஃபாதர் அஜித் ஸ்டைலில் படிக்க) ”இதோ பாருங்கையா… கல்சுரல்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம நடக்கனும். எதாவது ப்ரச்சனை நடந்தா உடனே நிறுத்திருவோம்” ன்னு. கல்ச்சுரல்ஸ நிறுத்துறது இருக்கட்டும் முதல்ல நீ இந்த அபிநயம் புடிக்கிறத நிறுத்துய்யா.

வழக்கமா கல்ச்சுரல் நடக்கும்போது கலவரம் பன்றது, பாதியில எதாவது ப்ரச்சனைய கெளப்பி மொத்தமா எந்திரிச்சி போறதுன்னு நம்மதான இந்த மாதிரி காவாளித்தனத்த இதுவரைக்கும் பன்னிட்டு இருந்தோம். இப்போ நம்மளே ஃபங்ஷன நடத்தும்போது யார் ப்ரச்சனை பன்னப்போறதுன்னு எல்லாரும் அத ஒரு பொருட்டாவே மதிக்கல. ஆனா ஆண்டவன் எங்கெங்க ஆப்பு வப்பான்னு நமக்குத் தெரியாது.



நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி ஒண்ணரை நாள். நம்ம பயலுக ஜட்ஜ்மெண்டுக்கு அப்பாற்பட்ட பல கெஸ்ட் அப்பியரன்ஸ்கள குடுத்து கொன்னுக்கிட்டு இருந்தாய்ங்க. ரெண்டாவது நாள் மதியானம். ஒரு மூணுமணி இருக்கும். முருகப்பா ஹால் நிரம்பி வழியிது. நிறைய பேருக்கு உக்காரவே இடம் இல்லை. நம்ம வேற ஃபைனல் இயரு. நம்ம நடத்துற ஃபங்ஷன்ல நம்மளே உக்காரலாமான்னு மத்தவங்களை சீட்டுல உக்கார வச்சிட்டு ஃபைனல் இயர்ல பாதி பசங்க ஹாலுக்கு நடுவுல இருக்க  walk way ல ஒருத்தன் மடியில ஒருத்தன் சாஞ்சா மாதிரி படுத்துக்கிட்டு,  நிகழ்ச்சிகள ரசிச்சிட்டு இருந்தோம்னு நினைக்காதீங்க. எந்த இயர் புள்ளைங்க நல்லா இருக்குன்னு பாத்துக்கிட்டு இருந்தோம். அதுவும் ஒருவித ரசனை தானே… அவ்வ்..

எப்பவுமே காலேஜ்ல immediate சீனியருங்க மட்டும் பசங்களுக்கு ஆகாது. ஏன்னா அவிங்க தான் வாங்குன மொத்த அடிய திருப்பி குடுக்கனும்னு புதுசா வர்றவிங்கள ragging அது இதுன்னு கொடுமைப் படுத்துவாய்ங்க. ஆனா double seniors கூட எப்பவுமே பசங்களுக்கு ஒரு நல்ல rapport இருக்கும். அதே மாதிரி தான் நாங்க ஃபைனல் இயர் படிக்கும்போது இருந்த 2nd year பசங்க கூட ஒரு understanding இருந்துச்சி. எங்க இயர் பேரு VVS 007 (வருத்தப்படாத வாலிபர் சங்கம் 007) அவிங்க, அவனுங்க ”நாங்க VVS juniors” ன்னு சொல்லுவாய்ங்க

அன்னிக்கு பசங்க வரிசையில முதல் ரெண்டு மூணு வரிசையில professorங்க உட்காந்திருந்தாங்க. அப்புறம் First year பசங்க, அதுக்கு பின்னால செகண்ட் இயர் பசங்க அதுக்கு பின்னால 3rd year பசங்க. கடைசில ஃபைனல் இயர் பசங்க. திடீர்னு அந்த 3rd year பசங்களும் 2nd year பசங்களும் உக்கார்ந்துருக்க இடத்துல, நல்லா இருந்த தேன்கூட கலைச்சி விட்டா மாதிரி எதோ கலைய ஆரம்பிச்சாய்ங்க.

எண்டான்னு பாத்தா 3rd year குரூப்புலருந்து ஒருத்தன் ஒரு ப்ளாஸ்டிக் chair ah எடுத்து, 2nd year பசங்க மேல வீசுனான். கொஞ்சம் கூட தாமதிக்காம அதுக்கு பதிலுக்கு 2nd year சைடுலருந்து ரெண்டு இரும்பு சேர இவிங்க மேல தூக்கி வீசுனாய்ங்க. அடாப் பாவிகளா.. ஆரம்பிச்சிட்டீங்களாடா.. அய்யய்யோ.. இத்தாண்டா அந்தாளு அன்னிக்கே சொன்னாரு. Walk way la உக்காந்துருந்த மொத்த ஃபைனல் இயர் பசங்களும் அவிங்கள நோக்கி போய் கையில கிடைக்கிறவன சமாதானப்படுத்தி உக்கார வைக்க முயற்சி பன்னோம்.

நா என்கிட்ட சிக்குன ஒரு 3rd இயர் பையன புடிச்சி “டேய் தம்பி.. கொஞ்ச நேரம் உக்காருங்கடா.. வெளில போய் விளையாடலாம்.. சும்மாவே அந்தாளுக்கு எங்களக்கண்டா ஆவாது. இதுல நீங்க வேறயாடா?” ன்னதுக்கு, உடனே அவன் கைய மடக்கி நடுவிரலை எங்கிட்ட காட்டி “அண்ணேன் எங்களப் பாத்து அவன் இப்புடி கைகாமிக்கிறான்னே” ன்னு வெறித்தனமா கத்துனான். “அதுக்கு ஏண்டா நீ என்கிட்ட அந்த மாதிரி காமிக்கிற… இதெல்லாம் ஒரு மேட்டராடா.. இங்கிலீஷ் படத்த பாருங்கடா.. எல்லாரும் எல்லாரையும் பாத்து இப்டித்தாண்டா ஜாலியா கை காமிப்பாங்க… அவன் சும்மா ஒண்ணுக்கு போறதுக்கு தெரியாம விரல மாத்தி காமிச்சிருப்பாய்ங்கடா” ன்னு தம்கட்டி சொல்லியும் அவன் “விடுங்கன்னே.. நாங்க கிளம்புறோம்” ன்னு கிளம்பி வெளிய பொய்ட்டான். 

(நா கேட்ட அந்த 3rd year பையனோட FB profile name Kannan Maadhu. இந்த சம்பவம் அவனுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு)

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே. இன்னும் பயிற்சி வேண்டுமோ” ன்னு யோசிக்கும் போதுதான் நம்ம பசங்க பிரம்மாஸ்திரத்த உபயோகிச்சாய்ங்க. கால் மணி நேரம் கழிச்சி குடுக்க வேண்டிய ஸ்நாக்ஸ அப்பவே ஓப்பன் பண்ணி வச்சிட்டாய்ங்க. சண்டை போட்டு வெளில போன பசங்கல்லாம் சரி போறது போறோம் அப்டியே ஸ்நாக்ஸ போட்டுக்கிட்டே போவோம்னு ஸ்நாக்ஸ்ல கைவைக்க, “Five star சாப்டுங்க… டேஸ்ட்ல மறந்து போயிருங்க” ங்குற மாதிரி வெளில சண்டை போட்டுக்கிட்டு போன பாதி பேரு ஸ்நாக்ஸ் டைம் முடிஞ்சி வரும்போது “டேய் ரமேஷ்.. டேய் சுரேஷ்” ன்னு பேசிக்கிட்டே திரும்ப உள்ள வந்து உக்காந்துட்டாய்ங்க. 

ஆனா மெயின் கலவரத்துல ஈடுபட்ட சில பேரு மட்டும் வெளிநடப்பு செய்ய, கேப் விழுந்த இடத்த நம்ம பயலுகள வச்சி ஃபில் பண்ணியாச்சு. தலைக்கு வந்தது, தக்காளிச்சட்னியோட போச்சிங்குற மாதிரி அன்னிக்கு வச்ச கட்லட்டும் தக்காளி சாஸூம் நடக்க இருந்த பெரும் கலவரத்த தடுத்து நிறுத்துச்சி.

அந்த செகண்ட் இயர் பசங்கள பாக்கும்போது அப்டியே ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க பசங்கள பாக்குற மாதிரி இருந்துச்சி. காவாளிப்பயலுகளா.. நாங்க தான் இப்டி ஆயிட்டோம்னா நீங்களும் ஏண்டா. போய் படிங்கடா.. நாங்க நடத்துன அந்த  கல்ச்சுரல்லருந்து, ஒரே ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கிட்டோம். 

“கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு… ஆனா கட்லட் இருந்தா தப்பிச்சிடலாம்” ங்குறதான் அது. 

தொடர்புடைய இன்னும் சில வரலாற்றுப் பக்கங்கள்

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!

தம்பி ப்ரச்சனை பண்ணாதீங்கப்பா- காரைக்குடி கலவரம்!!!






Monday, February 16, 2015

TEMPER – NTR’s BEST!!!


Share/Bookmark
ஆசைப்பட்டு ஒரு தமிழ் படத்துக்குப் போய் அடி வாங்கிட்டு வரும்போது, ச்ச இப்டி ஒரு படத்துக்கு போய் இப்டி நேரத்தையும், காசையும் வீணாக்கிட்டோமேன்னு தோணும். ஆனா தெலுங்கு படங்களுக்கு போகும்போது படம் நல்லா இல்லைன்னாலும் அந்த மாதிரி ஃபீலிங் எனக்கு வந்ததே இல்லை. இதுவரைக்கும் நா ஒரு 15 தெலுங்கு படங்களை தியேட்டர்ல பாத்துருக்கேன். அதுல 12 படங்களோட கதை ஒரே மாதிரி தான் இருந்துருக்கு. இருந்தாலும் காமெடி, ஃபைட்டு, பாட்டு, விஷுவல்ன்னு எதாவது ஒரு விஷயம் ஆறுதல் படுத்துற மாதிரி இருக்கும். தெலுங்கு படங்கள பாக்க ஆரம்பிச்சதுலருந்து, NTR, ரவிதேஜா படங்கள் மட்டும் தியேட்டர்ல மிஸ் பண்ணாம பாத்துகிட்டு வர்றேன்.

நம்ம விஜய்னாவுக்கு ஒரு சூப்பர் ஹிட்ட குடுத்த போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன் எடுத்த பூரி ஜகன்நாத் தான் இந்த டெம்பர் படத்தோட டைரக்டர். போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன எடுத்தது SP.முத்துராமன்ங்குறது வேற விஷயம். பூரி ஜகன்நாத்த பத்தி ஒரு விஷயம் சொல்லியே ஆகனும். ஒரு ஹீரோ ஒரு வருஷத்துக்கு 3 படம் ரிலீஸ் பண்றாருன்னா அது பெரிய விஷயம் இல்லை. ஆனா ஒரு டைரக்டர் ஒரு வருஷத்துக்கு மூணு படம் ரிலீஸ் பண்றாருன்னா ரொம்ப பெரிய விஷயம்.

அப்படித்தான் இந்த பூரி ஜகன்நாத்தும். குறைந்த பட்சம் வருசத்துக்கு ரெண்டு முதல் மூணு படங்களை ரிலீஸ் பன்றவரு.  நானும் என்னோட நண்பர் ஒருத்தரும் என்னடா ஆடு புழுக்கை போடுறமாதிரி எடுத்து தள்ளிக்கிட்டே இருக்காருன்னு கிண்டல் பண்ணி கூட சிரிச்சிருக்கோம். ஆனா அவர் எடுக்குற அந்த மூணு படத்துல ஒண்ணு மெகா ஹிட்டாகவும், இன்னொன்னு ஆவரேஜாகவும், இன்னொன்னு தரை ரேட்டுக்கும் இருக்கும்ங்குறது வேற விஷயம். இப்டித்தான் அவர் ரவிதேஜாவ வச்சி எடுத்த ”தேவுடு ச்சேசின மனுஷுலு” படத்துக்கு நம்பி போய் ரப்படி வாங்கிட்டு வந்தேன்.

சரி இந்தத் தடவ NTR ah என்ன செய்யப்போறாரோன்னு பயந்துகிட்டே போனதுக்கு, ஒரு செம சர்ப்ரைஸ். NTR ரோட பெஸ்டே இந்தப் படம்தான். அவர யாரும் இப்டி யூஸ் பண்ணதும் இல்லை இதுக்கு முன்னால NTR இவ்ளோ சூப்பரா நடிச்சதும் இல்லை.

ஒரு பழைய படத்துல நம்ம சத்யராஜ் ரொம்ப கெட்ட போலீஸா நடிச்சிருப்பாரு. படம் பேரு வீரப்பதக்கம்னு நினைக்கிறேன். எல்லார்கிட்டயும் லஞ்சம் வாங்குவாறு. எல்லாரையும் தப்பு செய்ய விடுவாறு. கடைசி வரைக்கும் திருந்தாமயே இருக்கும்போது, ஒரு சீன்ல கூட இருக்க ஒரு ஏட்டு ரவுடிங்களால அடிபட்டு சாக கிடக்கும்போது “நீ ஒரு நாளாவது நல்ல போலீஸா இருந்துட்டு சாகு”ன்னு எதோ வரு பஞ்ச் வசனம் சொல்ல அப்புறம் க்ளைமாக்ஸ்ல நம்ம சத்யராஜ் நல்ல போலீஸா மாறுவாறு.

டெம்பர்ரோட கதையும் கிட்டத்தட்ட இதுதான். ரொம்ப மோசமான ஒரு போலீஸ் நம்ம தலைவர் NTR. யூனிஃபார்ம் போடாத போலீஸ். பூரி ஜகன்நாத் பட போலீஸ்கள் யாருமே யூனிஃபார்ம் போடமாட்டாங்கங்குறது வேற விஷயம். கெட்ட போலீஸ்னா இந்த நம்மூர் படங்கள் எடுக்குறதுக்கு முன்னால ”இந்தப் படத்துல ஹீரோ ரொம்ப கெட்டவன்”ன்னு பில்ட் அப் குடுப்பாய்ங்களே அந்த மாதிரி இல்லை. உண்மையிலேயே ரொம்ப மோசமான கேரக்டராத்தான் உருவாக்கிருக்காங்க.


ஸ்மக்லிங்க் பண்ற வழக்கமான வில்லனான ப்ரகாஷ்ராஜ் “என்னை விட கெட்டவனா ஒருத்தன போஸ்டிங்” போடுங்கன்னு சொன்னதும் ”தயா”வ (NTR) அந்த ஏரியாவுக்கு போஸ்டிங்க் போடுறாங்க. ப்ரகாஷ்ராஜோட சேந்துகிட்டு அவரோட எல்லா கெட்ட காரியங்களுக்கும் சப்போர்ட் பண்றார். இடையில காஜல பாத்து (ஹலோ அந்த இடை இல்லப்பா) அந்தப்புள்ளை நமக்குத்தான்னு ஃபிக்ஸ் ஆயிருறாரு. அவரோட குறி எப்பவுமே பணம் பணம் பணம்.

”நா பணம் வாங்குறதால யாரும் சாகலை. யாரும் கற்பழிக்கப்படல. நா எதுக்கு காசு வாங்குறத நிறுத்தனும்”ன்னு தனக்கே ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வச்சிட்டு சுத்திட்டு இருக்க NTR, அவரால எது நடக்கலன்னு கெட்டவரா இருந்தாரோ அது நடந்துடவே, ஃபீல் ஆயி திருந்திடுறாரு.

NTR கூட இருக்க கான்ஸ்டபிள் கேரக்டர் செம்ம. அவர் NTR கெட்டவர்னு தெரிஞ்சதும் அவருக்கு சல்யூட்டே அடிக்க மாட்டாரு. அதே கடைசில NTR திருந்தி வில்லன்கள அடிச்சி பறக்க விடும்போது, NTR அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் அந்த கான்ஸ்டபிள் ஒவ்வொரு சல்யூட் அடிக்கிற சீன் தாறுமாறு. அதுவும் க்ளைமாக்ஸ்ல வர்ற கோர்ட் சீன் கொடூரம். யாருமே எதிர்பார்த்துருக்க மாட்டாய்ங்க.

NTRக்குள்ள இப்டி ஒரு நடிகர் ஒளிஞ்சிட்டு இருக்கதே இப்பதான் தெரியிது. ஒவ்வொரு சீனும் சும்மா பின்னி பெடல் எடுத்துருக்காரு. மொத்த படத்தையும் carry பண்ணிட்டு போறதே அவர் ஒருத்தர்தான். என்னைப் பொறுத்த அளவு அவரோட பெஸ்ட் இது தான்.

படத்துல ப்ரம்மானந்தம் இல்லாத குறைய  தீத்து வைக்கிறது வில்லன் ப்ரகாஷ்ராஜ்தான். நாய குளிப்பாட்டி நடுவீட்டுக்குள்ள வச்சாலும் அது திரும்ப நடுரோட்டுக்கு ஓடிரும்னு சொல்ற மாதிரி பழைய தாதா கேரக்டர விட்டுட்டு கொஞ்ச நாளா நல்ல நல்ல ரோலா பன்னிட்டு இருந்த்வர, திரும்ப பூரி ஜகன்நாத் தரை லோக்கல் வில்லனா ஆக்கிவிட்டாரு. அதுவும் அவரோட கெட்டப்ப பாக்கனுமே. சாக்கடையில அடைப்பெருக்க போறவங்க மாதிரி பேண்ட்ட போட்டு அத முக்கால மடிச்சி விட்டுக்கிட்டு பாக்கவே கண்றாவிகா உந்தி.

பஞ்ச் டயலாக் எழுதுறதுல மட்டும் தெலுங்கு படங்களை அடிச்சிக்க முடியாது. ப்ரகாஷ்ராஜ் : உள்ள என்னோட ஈகோ ஹர்ட் ஆவுதுடா.. NTR : உனக்கு ஈகோ உள்ள தான் இருக்கு. எனக்கு ஈகோ சுத்தி wifi ல இருக்கும்பாரு. அப்புறம் ஒரு சீன்ல அவர் ரவுடிங்கள அடிக்கும்போது அவர் உடம்புலருந்து wifi signal வர்ற மாதிரி காமிக்கிறாய்ங்க. ஆத்தாடி.

அனூப் ரூபன்ஸ்ங்குறவர் மியூசிக்ல அஞ்சி பாட்டுமே சூப்பர். லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போன மணி ஷர்மா மீண்டும் இந்தப்படத்துக்கு BGM மட்டும் போட்டிருக்காரு. பூரி ஜகன்நாத் ஃபுல் பார்ம். ஸ்க்ரீன்ப்ளே, டயலாக் எல்லாமே தாறுமாறு. அவரோட கவுண்ட்ல  வருஷத்தோட சூப்பர்ஹிட் படத்த குடுத்துட்டாரு. அடுத்து ஒரு ஆவரேஜ், ஒரு தரைமொக்கை கண்டிப்பா உண்டு. உசாரைய்யா உசாரு.

மொத்தத்துல டெம்பர் NTRரும் சரி, பூரி ஜகன்நாத்துக்கும் சரி அவங்களோட பெஸ்ட்ட குடுத்துருக்காங்கன்னு சொல்லலாம். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...