Thursday, December 29, 2011

கடுப்பேற்றிய படங்கள் -2011


Share/Bookmark
புத்தாண்டு வரப்போகுதுன்னு ஆளாலுக்கு டாப் 10 படங்கள், டாப் 10 ஹீரோயின்கள்னு கவுண்டவுன் போட ஆரம்பிச்சிட்டாங்க. சரி நாமளும் எதாவது கவுண்டவுன் போடலாமேன்னு தான் இந்த முடிவு. 2011ல நா எதிர்பாத்து, பாத்து கடுப்பான படங்களை பத்தின ஒரு பார்வை. இத படிச்சிட்டு நீங்க கடுப்பானா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

யுத்தம் செய்


மிஷ்கினின் முதல் மூண்று படங்கள் அவரின் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்திருந்துச்சி. (வேற மொழியிலிருந்து படங்களை சுட்டிருந்தால் கூட). ஆனா யுத்தம் செய் பாத்தப்புறம் மொத்தமும் போயிருச்சி. தமிழ் படம் ஆங்கில படம் ரெண்டுத்துலருந்தும் கொஞ்ச கொஞ்ச சீன்ஸ சுட்டு படமாக்கியிருந்தாரு. சேரன் படத்துக்கு ஒரு பெரிய மைனஸ். நிறைய பேருக்கு இந்த படம் பிடிச்சிருந்தாலும் எனக்கு என்னவோ சுத்தமா புடிக்கல. இந்த படத்தை பற்றி எழுதிய இரண்டு விமர்சனங்கள்  யுத்தம் செய்- செத்துட்டோம் போய், புதிய யுத்தமல்ல

மாப்பிள்ளை படிக்காதவன் மாதிரியே தனுஷ், விவேக் & சுராஜ் காம்பினேஷன் பட்டைய கெளப்பும்னு நெனச்சிகிட்டு முதல்நாளே பார்த்த படம். ஒரிஜினல் வெர்ஷனோட 10% க்கு கூட இந்த படம் இல்லை. எதோ விவேக் இருந்ததால கொஞ்ச நேரம் தியேட்டர்ல உக்கார முடிஞ்சது

வேங்கை

ஹரி படங்கள் ஒரே மாதிரி இருக்கும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கு நா மிகப்பெரிய fan. ஏன்னா அவரோட screenplay அவ்ளோ சூப்பரா இருக்கும். ஆனா "ஐயா" ன்னு 2005 ல சரத்குமார வச்சி எடுத்த அதே படத்த 2011 ல வேங்கைன்னு பேர வச்சி திரும்ப எடுத்து ரிலீஸ் பண்ணிருந்தாரு பாருங்க.. ஏன் சார் ரீமேக்னா atleast ஒரு 20 வருஷமாவது ஆவனும் சார். பெரிய ஏமாற்றம் இந்த படம் தான்

அவன் இவன் அவனையும் இவனையும் வச்சி இவரு போட்ட மொக்கை இருக்கே... அந்த பயலுகல விட்டுருந்தா அவிங்க ஸ்டைலுல ரெண்டு கமெர்ஷியல் படமாச்சும் நடிச்சிருப்பாய்ங்க. காமெடிங்கற பேர்ல படம் முழுக்க அருவருப்பான வசங்கள். அவரோட சின்ன வட்டத்துலருந்து வெளியே வரமா எடுத்த இந்த படம் மரண மொக்கை. இந்த படத்தை பாத்துட்டு நா பொலம்புனது  அவன் இவன், அப்பாடக்கர் பாலாவின் பயோடேட்டா

வெடி


  அவன் இவனுக்கு அப்புறம் நம்மாளு நடிச்ச ரீமேக் ஆக்ஷன் unlimited. ஆனா
என்ன ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படம். தெரியாம இப்ப எடுத்து அவிங்களுக்கு அவங்களே வெடி வச்சிகிட்டாங்க. இந்த படம் பாத்து எனக்கு நா வெடி வச்சிகிட்டது வெடி- மரண கடி

7ம் அறிவுஇது ஒரு மெகா பட்ஜெட் மொக்கை. ஆரவாரமில்லாமல் சாதாரணமா வந்துருந்தா இவ்வளவு ஏமாற்றம் இருந்துருக்காது. இதுல மொழிப்பற்று, தமிழ்பற்றுன்னு படத்த ஓட்டணுங்கறதுக்காக சம்பந்தமில்லாம எத எதையோ திணிச்சி படம் வீணாயிருச்சி. இந்த படத்தை பற்றிய என் விமர்சனம் எழாம் அறிவு - எ.ஆர்.முருகதாஸின் கந்தசாமி


ராஜபாட்டை  


  
சுசீந்திரன் ஒரு மொக்கைன்னு தெரியும். சரி விக்ரம் ஒரு நல்ல கதையில தான்
நடிச்சிருப்பாருன்னு பாத்தா, இவருக்கு சுசீந்த்ரன் பரவால போலருக்கு. விக்ரமுக்கு சூட்டே ஆகாத ஒரு கதை. இந்த வருஷத்தோட கடைசி மொக்கை இதுதான். இந்த படத்தை பற்றிய நாலு வரி விமர்சனம் ராஜபாட்டை- பவர்ஸ்டார் படத்துக்கான சரியான போட்டி 

ஒஸ்தி - தி (த)மாஸ்
(நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க)


தமிழ்ல சுமார் 30 வருஷமா இதே மாதிரி பல போலீஸ் கதைங்க வந்துருக்கு. ரவுடி போலீஸ், என்கவுண்டர் போலீஸ், ஆக்ஷன் போலீஸ், இதுதாண்டா போலீஸ் ஏன் சிரிப்பு போலீஸ் மொதக்கொண்டு நாம  பாத்துருக்கோம். அதுக்கு மேல டபாங்ல என்ன இருக்குன்னு ரீமேக் பண்ணாங்கன்னு தெரில. எல்லாருக்கும் பெரியண்ணன் மாதிரி இருக்க நம்ம ஜித்தன் ரமேஷ சிம்புவுக்கு
தம்பியா நடிக்க வச்சதுதான் உச்சகட்ட காமெடி. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சேகர் said...

7 ஆம் அறிவு, யுத்தம் செய் , அவன் இவன் போன்ற படங்களை நீங்கள் இதில் தவிர்த்திருக்கலாம்..

அனுஷ்யா said...

மிக சரியான தர வரிசையே..(என்னோட இரசனையில் ஒத்து போவதால்..ஹி ஹி ஹி...)
படித்து முடிக்கும் வரை ஒன்றாம் இடம் நடுநிசி நாய்களுக்கே இன்று நினைத்து இருந்தேன்...
அதை மறந்து விட்டீர் போலும்..

அனுஷ்யா said...

முடிஞ்சா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க.. கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

சமுத்ரா said...

உண்மை சொன்னீர்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...