Monday, December 12, 2011

போராளி


Share/Bookmark
 வர வர நம்ம ஊர்ல ஆக்க்ஷன் படம்னு எதாவது ரிலீஸ் ஆனாலே தியேட்டர் பக்கம் போறதுக்கு ரெம்ப பயமா இருக்கு. உள்ளூர் ரவுடிங்களை போட்டு பொறட்டி எடுத்தது பத்தாதுன்னு இன்டர்நேஷனல் லெவல்ல நம்ம ஹீரோக்கள் ரவுடிசத்த ஒழிச்சிகிட்டு வர்றாங்க.வெடி, வேலாயுதம் ஏழாம் அறிவுன்னு ரெண்டு மூனு மாசமா ஒரே மொக்கை படங்களை பாத்து கடுப்புல இருக்கும் போது, gap la ஒரு நல்ல படம் வந்துருக்கு.

நல்ல கதையோ கெட்ட கதையோ, ஒண்ண ரெடி பண்ணி வச்சிக்கிட்டு ஒவ்வொரு ஹீரோவா போனா அவிங்க ரெண்டு குத்து பாட்ட சேத்துவிடு, நாலு ஃபைட்ட உள்ள விடு, அந்த ஹீரோவ தாக்குற மாதிரி நாலு வசனத்த அள்ளி விடுன்னு ன்னு ஆயிரம் நொள்ளை சொல்லுவாய்ங்க.(என்னங்க? விஜய்யையா? ச்ச.. ச்ச... நா. பொதுவா சொன்னேன்) இந்த ப்ரச்சனையெல்லாம் இல்லாம அவருக்கு புடிச்ச கதைய அவருக்கு புடிச்ச டீமோட அவருக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கிட்டு இருக்காரு சசிகுமார்.

சசிகுமார் நடிக்கும் போது சமுத்திர கனி டைரக்ட் பண்ணுவாரு.. சமுத்திர கனி நடிக்கும் போது சசிகுமார் டைரக்ட் பண்ணுவாரு... wow... beautiful game... எது எப்புடியோ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேந்து இது வரைக்கும் நல்ல படமா தான் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.. சரி போராளிக்கு வரலாம்.

படத்தோட 1st half la சசிகுமார் இவளோ நல்லவாரான்னு எல்லாரும் கேக்குற மாதிரி கிட்ட தட்ட விக்ரமன் படத்து ஹீரோ மாதிரி வர்றாரு. காமெடி, செண்டிமெண்டுன்னு 1st half போறதே தெரில. அங்கங்க புல்லரிக்க வைக்கிற மாதிரி சில சீன்ஸ். அப்புறம் வழக்கம் போல இன்டர்வல் நெருங்க போற நேரத்துல ஒரு ட்விஸ்ட்.. ஹீரோ யாரு தெரியுமா?...ன்னு ஒரு கதை சொல்றாங்க.. இப்பல்லாம் தமிழ் சினிமா இன்டர்வல்ல ஒரே ட்விஸ்டு ட்விஸ்டா பாத்து இப்பல்லாம் இன்டர்வல்ல ட்விஸ்ட் இல்லன்னாதான் நமக்கு
பெரிய ட்விஸ்டா இருக்கு.

ஆனா ஹீரோ பாம்பேல பெரிய டான்... ஹைதராபாத்ல பெரிய ரவுடி, ஹீரோ ஒரு  IPS ஆபீசர்... அண்டர் கவர் ஆப்ரேஷன்ல இருக்காருன்னு வழக்கமான ஃப்ளாஷ்பேக் மொக்கைகள போடாம ஒரு டீசண்டான (புதுசுன்னு சொல்ல முடியாது) ஃப்ளாஷ்பேக்.2nd half la நம்மள அப்புடியே எதுவும் பேச முடியாம உக்கார வச்சிடுறாங்க. வழக்கமான சசிகுமார் பட effect. க்ளைமாக்ஸ்ல ஒரு 25 பேர அடிக்கிற ஃபைட்டு மட்டும் இந்த படத்துக்கு ஒட்டாத மாதிரி இருக்கு

கஞ்சா கருப்பு ஹரி படங்கள்ல போடுறா மாதிரி மொக்கைய போடாம நல்ல டைமிங் டயலாக்ஸ்ல நல்லா சிரிக்க வைச்சிருக்காரு. சசிகுமாரோட சின்ன வயசு சினேகிதனா வர்ற 50 பரோட்டா சாப்புடுறவரும் (பேரு தெரிலப்பா) நல்லா சிரிக்க வச்சிருக்காரு.

நல்ல கேரக்டர் செலக்ஷன்ஸ். கு.ஞானசம்பந்தன், படவா கோபி, இன்னொரு ஹீரோ தெலுகு நரேஷ் எல்லாருமே நல்ல நடிப்ப வெளிப்படுத்திருக்காங்க. படவா கோபிய இன்னும் நல்லவே யூஸ் பண்ணிருக்கலாம். சான்ட்ராவுக்கு சன் டிவி அசத்தப்போவது யாருல நல்ல build up குடுத்து வச்சிருந்தாய்ங்க.. கடைசில படவா கோபி wife ah இந்த படத்துல ஒரு மொக்க ரோல்ல நடிச்சிருக்காங்க. ஹீரோயின் ரெண்டு பேருக்குமே அதிக வேலை இல்ல. பாட்டு எதுவும் சொல்லிகிற மாதிரி இல்ல.எப்புடி இருந்தாலும் படம் நமக்கு புடிச்சா மாதிரியே இருக்கு. இந்த வருஷத்துல வந்த ஒண்ணு ரெண்டு நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணு.  அப்புறம் ஏண்டா பெருச்சாளின்னு போட்டுருக்கேன்னு பாக்குறீங்களா? ரைமிங்கா வேற எதுவும் கெடைக்கலப்பா... அதான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

majo said...

ம் !! நீங்க தான் நல்ல படம்னு சொல்தீக . இன்டர்வெல் முடிஞ்சு பாத்தா என்னடா வேற படம் மாதிரி தெரியுதுன்னு தியட்டேர்ல ஒரு சலசலப்பு.
நீங்க தான் படத்தை பீதிக்கணும்
உண்மைய சொல்லனும்னா, நாடோடி டீம் ஆச்சே நல்லா இருக்கும்ம்னு போனா மண்டை காஞ்சு வெளியே வந்தது தான் மிச்சம்.

Unknown said...

லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

rishvan said...

உன்மையான மதிப்புரை ...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

கோவை நேரம் said...

சின்ன வயசு நண்பர் ...பரோட்டா சூரி ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...