Tuesday, December 20, 2011

பவர்ஸ்டார் தரிசனம்


Share/Bookmark
இந்த பதிவின் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்                                                                                  ஊர் மக்கள் எல்லாம் பவர்ஸ்டார் இருக்குற கேரவன சுத்தி கூட்டமா நின்னுகிட்டு இருக்க கவுண்டர் கூட்டத்த வெளக்கிகிட்டு உள்ள வர்றாரு.
கவுண்டர்: "டேய் அரை டரவுசர் பசங்களா.. தள்ளுங்கடா... என்னடா இங்க கூட்டம்... கெளம்பு கெளம்பு..."

கூட்டத்துலருந்து ஒருத்தரு "யோவ் அழகுராஜூ... எங்கள தள்ளிவிட்டுட்டு நீ எங்கய்யா போற?"

கவுண்டர்:  "என்னது... நா எங்க... போறனா.... டேய்... இந்த வண்டிக்குள்ள இருக்கது யாரு தெரியுமாடா?"

"பவர் ஸ்டார் சீனிவாசன்"

கவுண்டர்:  "உனக்கு தாண்டா அவன் பவர் ஸ்டாரு... எனக்கு அவன் வெறும் சீனிவாசன் தான்.. நா அவன எப்புடி கூப்புடுவே தெரியுமா.. டேய் சீனி ... டேய் சீனின்னு தான் கூப்புடுவேன்...i'm சீனிவாசனோட சின்ன வயசுலருந்து ஃப்ரண்டு.. 10ங்க்ளாஸ் வரைக்கும் பாம்பேல ஓண்ணா படிச்சவண்டா.. என் பேர சொன்னா போதும் வண்டிக்குள்ளருந்து உடனே பொத்துகிட்டு வந்துருவான்... அவளவு சினேகிதம்"

செந்தில் கவுண்டரின் காதுக்குள் நைசாக  "அண்ணேன்... நீங்க ரெண்டாப்பு வரைக்கும்  தானே படிச்சிருக்கீங்க... இப்போ அந்தாளோட பத்தாப்பு படிச்சமுன்னு சொல்றீங்க?"

கவுண்டர் மெதுவாக "டேய் கக்கூஸ் ப்ரஸ் மண்டையா.. அது உனக்கு தெரியும்... இவனுகளுக்கு தெரியுமா? நா வெவரம் தெரிஞ்சதுலருந்து இந்த ஊரையே தாண்டுனதில்ல.... பாம்பேல படிச்சேன்ன்னு சொல்றேன் அப்புடியான்னு வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கானுக.. நா இவனுகள அப்புடி பழக்கி வச்சிருக்கேண்டா... சரி நோண்டாமா நீயும் சேந்து ரெண்டு பிட்ட போடு... உங்க அக்காட்ட சொல்லி ரெண்டு கறிக்கஞ்சி ஊத்த சொல்றேன்"ன்னு சொல்லிட்டு

"ஏய் நகரு நகரு... எல்லாரும் அப்புடியே two step back...என் நண்பனுக்கு crowd na அலர்ஜி..."

உடனே செந்தில் "யோவ் ஆம்பளைங்கல்லம் பின்னாடி போங்க... வயசு பொண்ணுங்கல்லாம் முன்னாடி வாங்க.. பவர் ஸ்டாருக்கு சின்ன பொண்ணுங்கல தான் ரொம்ப புடிக்குமாம்... எங்க அண்ணேன் சொன்னாரு"

கவுண்டர் திரும்பி ஒரு லுக்கு விட்டுட்டு "டேய் கரடி..... பொண்ணுங்கள பவர் ஸ்டாருக்கு புடிக்குமா இல்ல உனக்கு புடிக்குமா... பன்னி அடிக்கிறது பாவம்னு தான் உன்ன விட்டு வச்சிருக்கேன்... என்ன அந்த பாவத்தையும் பண்ண வச்சிராத.. ஒழுங்கா வாய வச்சிகிட்டு நில்லு...இல்லன்னா வீடு போகும்போது வாயி இல்லாமதான் போவ"

கூட்டத்துலருந்து ஒருத்தன் கவுண்டர் கிட்ட " ஆமா பவர் ஸ்டாரும் நீங்களூம் பாம்பேல எந்த ஸ்கூல்ல படிச்சீங்க? "

" டேய் நாயே... பாம்பே இதுக்கு முன்னால போயிருக்கியா?"

"இல்லை"

"பாம்பேஎந்த பக்கம் இருக்கும்னாவது தெரியுமா?"

"தெரியாது..."

"அப்புறம் என்ன இதுக்குடா கேட்ட?"

"சும்மா தெரிஞ்சிகலாம்னு தான்"

"இத தெரிஞ்சிகிட்டு நீ என்ன கலெக்டர் ஆக போறியா... (தலையில அடிச்சி)... போடா..போய் கடைசி வரிசையில நில்லு...போ "

செந்தில் : அண்ணே பவர் ஸ்டாரு வர்றாரு.. பவர் ஸ்டாரு வர்றாருண்ணு கத்த... கவுண்டர் திரும்பி கேரவன பாக்க...

பவர் ஸ்டார் சிரிச்ச மொகத்தோட கீழ் எறங்கி கை காட்டுறாரு...

கவுண்டர் முகத்துல வெருங்கால்ல சாணிய மிதிச்சிட்டா மாதிரி ஒரு எஃபெக்ட்
"இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... எது... இந்த நாயி தான் பவர் ஸ்டாரா..... அடடாஆஆஆ... தப்பு பண்ணிட்டியேடா... சோஒ..."

லைட்டா அப்புடியே turn அடிச்சி கூட்டத்துக்குள்ள பூந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்றாரு

செந்தில் :
யோவ் எங்க அண்ணன் போறாருய்யா புடிங்க புடிங்க...

கூட்டத்துலருந்து ஒருத்தர் கவுண்டர புடிச்சி " யோவ் அழகு ராஜூ உன் நண்பன பாக்காம எங்கய்யா போறா...

"யோவ் இந்த நாயி யாருண்ணே எனக்கு தெரியாதுய்யா.... மக்களே இந்த பாவத்துகெல்லாம் நா ஆளாகவே மட்டேன்... என்ன விட்டுருங்க"

செந்தில் : "ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...."

"செருப்பால அடி நாயே... அவன பார்றா கர்பமான கரடி மாதிரி இருக்கான்.. அவன் உனக்கு ஆடு மாதிரி தெரியிறானா?"

பவர்ஸ்டார் : தம்பி...

கவுண்டர் : அண்....ணா...

பவர்ஸ்டார் : என்னப்பா வேணூம்.. ஆட்டோ கிராஃபா..

கவுண்டர் : அந்த கருமாந்த்ரமெல்லாம் ஒண்ணும் வேணாம்ங்கண்ணா ஒரு சின்ன சந்தேகம் கேட்டுகட்டுமா?

பவர்ஸ்டார் : கேளுப்பா...

கவுண்டர் :
இந்த வயசுல உங்களுக்கு நடிச்சே ஆகனும்னு எப்புடிங்கண்ணா தோணுச்சி?

பவர் ஸ்டார் :
இத்தனை நாளா எனக்குள்ள தேக்கி வச்சிருந்த ரகசியத்த உன்கிட்ட  சொல்றேன்பா... சின்ன வயசுலருந்து எனக்குள்ள நடிகனாகனும்ங்கற வெறித்தீ உள்ளுக்குள்ள எறிஞ்சிகிட்டே இருந்துச்சி... ஆனா என்ன வச்சி படம் எடுக்க அப்ப ஒருத்தரும் ரெடியா இல்ல. நா சான்ஸ் கேட்டு போனாலே எல்லாரும் அலறி அடிச்சிகிட்டு ஒடிட்டாங்க"

கவுண்டர்: (மனதுக்குள்) ஆக்காங்... இந்த மூஞ்சிய போட்டோவே எடுக்க முடியாது... இதுல படமெங்க எடுக்குறது..

"அப்பதான் நா முடிவு பண்ணேன்... டாக்டராகி சம்பாதிச்சி சொந்த காசுலயே படம் எடுக்குறதுன்னு..அதே மாதிரி டாக்டர் ஆணேன்... சம்பாதிச்சேன்... நானே படம் எடுத்தேன்..."

அதாவது டாக்டரா இருந்து ஒவ்வொருத்தரா சாவடிக்கிறது புடிக்கலன்னு கூட்டம் கூட்டமா சாவடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க.. புயூட்டிஃபுல் கேம்...ஆனா இப்புடி ஒரு கருமம் புடிச்ச ப்ளாஷ் பேக்க நா இது வரைக்கும் கேட்டதில்லீங்கண்ணா..."

பவர் ஸ்டார் : என்னது?

கவுண்டர் : " த த ப..... இது... இப்புடி ஒரு கருத்துள்ள ப்ளாஷ்பேக்க நா இது வரைக்கும் கேட்டதில்லீங்னு சொல்ல வந்தேனுங்கண்ணா...  "

பவர்ஸ்டார் :
ஓகோ..

கவுண்டர் : நா நீங்க எத்தனை படம் வேணாலும் நடிங்கண்ணா... உங்கள மாதிரி துடிப்புள்ள நடிகர்கள் சினிமாவுக்கு வந்தாதான் தமிழ் சினிமா (ரொமேண்டிக் லுக்குல வாய வச்சிகிட்டு) ஒலக தரத்துக்கு ஒயரும்... ஆக்காங்.."

பவர் ஸ்டார்:
ரொம்ப நன்றி தம்பி

கவுண்டர் : அது என்னங்கண்ணா மூக்குக்கு கீழ புல்லு கட்டுல தார் ஊத்துன மாதிரி எதோ இருக்கு...

பவர் ஸ்டார் : அது மீசைப்பா...

கவுண்டர் : ஓ... பாத்துங்கண்ணா... நம்ம ஊருல ஆடு ஜாஸ்தி.. புல்லு கட்டுன்னு ஏறி மேஞ்சிட போகுது...

பவர் ஸ்டார் "ஹாஹா ஹா ஹா" ன்னு எல்லா பல்லும் தெரியிற மாதிரி சத்தம் போட்டு  சிரிக்க பக்கதுல இருந்த செந்தில் மயக்கம் போட்டு கீழ விழுந்துடுறாரு...


கவுண்டர் : ண்ணா... நீங்க சிரிக்காதீங்கண்ணா.. கொழந்தை பையன்  பயப்படுறான்...

செந்தில் : அண்ணேன்.. அந்தாளூ பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு?

கவுண்டர் : ஆமா அந்தாளூ பல்ல நா எதோ அப்புடி பண்ண மாதிரி கேக்குற.. தீவாளியும் அதுவுமா எவண்டாயோ போயி பஞ்ச் டயலாக் பேசிருப்பான்.. அவன் வெடிய கொளூத்தி வாயில போட்டுருப்பான்... அப்ப செதறுன பல்லாத்தான் இருக்கும்.... டேய் வந்துடுடா இந்த கடல் பன்னி இன்னொரு தடவ சிரிக்கிறதுக்குள்ள ஓடிருவோம்...

ஒரு மணி நேரத்திற்கு பிறது, கவுண்டரின் மெக்கனிக் ஷாப்...

கவுண்டர்: டேய் warewolf மண்டையா... என்னடா வந்ததுலருந்து திங்க்கிங்

செந்தில் :
நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்ணே...நானும் சினிமாவுல சேந்து பெரிய ஹீரோ ஆயிரலாம்னு இருக்கேன்...

கவுண்டர் : வெரிகுட்..அந்த கடல் பன்னி ஹீரோவா நடிக்கும் போது இந்த காட்டு பன்னி நடிக்க கூடாதா என்ன... படத்துல நடிக்கப் போற சரி... அத யாரு பாக்குறது...

செந்தில் :
"நீங்க தான்" ன்னு சொல்லிட்டு லைட்ட பம்பிகிட்டே ஒட கவுண்டர் கட்டைய எடுத்துகிட்டு பின்னாடி ஓடுறாரு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. அருமை சுவாரஸ்யமாக இருக்கு பாராட்டுக்கள்

karthikkumar said...

"செருப்பால அடி நாயே... அவன பார்றா கர்பமான கரடி மாதிரி இருக்கான்.. அவன் உனக்கு ஆடு மாதிரி தெரியிறானா?"//

super siva.. :))

Unknown said...

Great.
படிக்கும் போது கவுண்டமணி செந்தில் நகைச்சுவை கண்முன்னே படமாய் ஓடியது,
keep it up.

Mohamed Faaique said...

சூப்பர் காமெடி பாஸ்... செம கடி...

Ganesh said...

nice...
I laughed...

Anonymous said...

rajiniku ivar yevalovo thevalai

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...