Tuesday, June 7, 2016

இறைவி – தரம்!!!


Share/Bookmark
கடந்த நாளு நாளா ஃபேஸ்புக்கு டிவிட்டர் மட்டும் இல்லாம இன்ன பிற வலைத்தளங்கள் எதைத் தொறந்தாலும் எல்லா இடத்திலும் “இறைவி” “இறைவி” ங்குற வார்த்தையப் பாத்து எல்லாருக்கும் சலிச்சு போயிருக்கும். ஃபேஸ்புக்குல நாலு வருஷத்துக்கு முன்னால அக்கவுண்ட் மட்டும் ஓப்பன் பன்னிட்டு காணாம போனவன்லாம் திடீர்னு ”இறைவிடா” ங்குறான். ஸ்லீப்பர் செல்லுங்கல்லாம் ”உலகசினிமாடா” ங்குறாய்ங்க. ”நீங்கல்லாம் இவ்வளவு நாளா எங்கடா இருந்தீங்க” ன்னு தோணுச்சி. ஒரு பக்கம் எக்ஸ்ட்ரீம் ஆஹா ஓஹோ.. இன்னொரு பக்கம் அதுக்கு நேர் எதிரா தரை ரேட்டுக்கு உக்காரவே முடியல, கண்றாவி போன்ற கருத்துக்கள். வாரக்கடைசில ஊருக்கு பொய்ட்டதால முதல் நாளே படத்த பாக்க முடியல. நேத்து வந்து மொத வேலையா டிக்கெட் புக் பன்னா, Idream ல 1st க்ளாஸ்ல மட்டும் நாலே டிக்கெட்டுதான் இருந்துச்சி. மத்ததெல்லாம் ஃபுல்லு. அவசர அவசரமா அதுல ஒண்ண புக் பன்னிட்டு தியேட்டருக்குப் போனா…. ங்கொய்யால…  நா மட்டும் தான் இருக்கேன். மத்த ஒரு பயலக் காணும். முக்கால் வாசி தியேட்டர் காலி.. டேய் என்னடா பித்தலாட்டம் இது…. இப்டித்தான் நீங்க ஆன்லைன்ல ஃபுல்லுன்னு காமிச்சி ஊர ஏமாத்துறீங்களாடா?

சில படங்களுக்கு க்ளைமாக்ஸ் என்னன்னு முன்னாலயே தெரிஞ்சா, முதல்லருந்தே படம் பாக்குற இண்ட்ரஸ்ட் போயிரும். அந்த மாதிரி படங்களுக்கு பொதுவா படத்தோட ஆரம்பத்துலயே ஸ்லைடு போட்டு “இந்த கதையையோ க்ளைமாக்ஸயோ வெளில சொல்லாதீங்கன்னு போடுவாங்க. உதாரணமா “கோ” படத்துல அஜ்மல்தான் வில்லன்னு முன்னாலயே நமக்குத் தெரிஞ்சா படமே நம்மால ஒழுங்கா பாக்க முடியாது. ”சமர்” ன்னு ஒரு விஷால் படம். நானும் என் ஃப்ரண்டும் பைக்குல படத்துக்கு போயிட்டு இருக்கோம். அப்ப திடீர்னு அவன் “டேய் இது The Game படத்தோட காப்பியாம்டா” ன்னான். அவ்வளவுதான் சுர்ர்ர்ர்னு ஆயிருச்சு. ஏன்னா Game ah நா முன்னாலயே பாத்துருந்தேன். ”சமர்” ல ஒரு சீன் கூட என்னால concentrate பன்னி பாக்க முடியல. ஒரு வேளை அவன் சொல்லாம படம் பாத்து நானா அது Game படம்ன்னு கண்டு புடிச்சிருந்தா கூட சில காட்சிகள் ரசிச்சி பாத்துருப்பேன்.

சரி இப்ப எதுக்கு இத சொல்றேன்னா, படம் ரிலீஸூக்கு முன்னாலயே கார்த்திக் சுப்பராஜ் படத்தோட கதைய வெளில சொல்லாதீங்கன்னு ட்வீட் பன்னிருந்தாப்ள. அவர் சொல்றத விட, படம் பாக்குற நமக்கு எத சொல்லலாம் எத சொல்லக் கூடாதுங்குற ஒரு சென்ஸ் இருக்கனும். சில பேரு விமர்சனம்ங்குற பேர் படத்துல என்னென்ன ட்விஸ்டு, யார் யார் என்னென்ன பன்றாங்க மொதக்கொண்டு எல்லாத்தையும் சொல்லி எழுதிருக்காங்க. அட்லீஸ்ட் எழுதுறதுக்கு முன்னால ஒரு spoiler alert ஆவது போடுங்க. நம்ம பாக்குறப்போ நமக்கு கிடைக்கிற அந்த ஃபீல், சர்ப்ரைஸ் எல்லாம் மத்தவங்களுக்கும் கிடைக்கனும். சரி இங்க நம்ம கதையோட டுஸ்டுகளப் பத்தி எதுவும் சொல்லல. அதனால தைரியமா படிக்கலாம்.

மூணு வெவ்வேற சூழல்ல வளர்ற பெண்கள், வாழ்க்கையைப் பற்றிய அவர்களோட வெவ்வேறு எதிர்பார்ப்புகள், அவர்களுக்கு அமைந்த கணவன்களால் அவங்களோட வாழ்க்கை எப்படி மாறுதுங்குறதுதான் இறைவி.  

பொதுவா ஆண் பெண் சமம்னு பேசுனாலும், நம்மோட சமுதாய அமைப்ப பொறுத்த அளவு பெரும்பாலும் பெண்கள் ஆண்களைச் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கு. வெளிநாடுகள் மாதிரி புருஷன் ரெண்டு நாள் ப்ரச்சனை பன்னா மூணாவது நாள் “ஓடிப்போங்க நாயே” ன்னு துரத்தி விட்டுட்டு அடுத்த வாழ்க்கையைத் தேடிப்போற நிலமை இன்னும் நம்மூர்ல கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ கிடைச்சவனை வச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பெத்தவங்களுக்காகவும், மத்த நாள் குழந்தைகளுக்காகவும் என்ன நடந்தாலும் பொறுத்துக்கிட்டு வாழ்க்கைய நடத்துற பெண்களுக்கு, ஆண்கள் உரிய மரியாதையையும், மதிப்பையும், நேரத்தையும் கொடுக்குறாங்களாங்குறது சந்தேகம் தான்.

எப்போதுமே ஒரு ஆணை சார்ந்து ஒரு பெண்ணோ அல்லது ஒரு குடும்பமோ நிச்சயம் இருக்கும். அவனுக்கு நடக்குற ஒவ்வொரு நிகழ்வும், அவன் எடுக்குற ஒவ்வொரு முடிவும் அவனை மட்டும் இல்லாம அவனை நம்பியிருக்க குடும்பத்துக்கும் பெரிய பாதிப்பை குடுக்கும்.

ஒரு நாள் காலையில ஏழுமணிக்கு கம்பெனிக்கு போறதுக்காக விம்கோ நகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போனேன். அங்கங்க கும்பல் கும்பலா நின்னு எதயோ ட்ராக் பக்கத்துல உத்து பாத்துக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் பக்கத்துல போய் பாத்தோன ஒரு மாதிரி ஆயிருச்சி. ஒருத்தர் ரெண்டு பாதியா ட்ராக்குக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் கிடக்குறாரு. இடுப்புக்கு மேல ஒரு பக்கம். இடுப்புக்கு கீழ ஒரு பக்கம். நல்லா ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை போட்டு ஆஃபீஸ்க்குதான் அவர் கிளம்பி போயிருக்கனும். என்னனு பக்கத்துல விசாரிச்சப்போ, ட்ரெயின் நிக்கிறதுக்கு முன்னாலயே இறங்க முயற்சி பன்னி உள்ள மாட்டிக்கிட்டாருன்னு சொன்னாங்க. சில பேர் எதோ எக்ஸ்ப்ரஸ் வரும்போது க்ராஸ் பன்னிட்டாருன்னாங்க. வாட்ஸாப்லயும், ஃபேஸ்புக்லயும் போடுறதுக்காக ரெண்டு துண்டான அந்த உடம்ப ரெண்டு மூணு பேரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு காலையில அவர ஆஃபீஸ்க்கு கிளப்பி அனுப்பிட்டு சாயங்காலம் வருவார்னு நம்பிக்கிட்டு வீட்டுல இருக்க அவர் குடும்பம் கண்ணு முன்னால வந்து போச்சு. அவங்க வாழ்க்கையே தலைகீழா மாறிப்போயிரும்.

இதுபோல ஒண்ணு ரெண்டு நிகழ்வுகள எங்க குடும்பத்துலயும் கடந்து வந்ததாலயா என்னன்னு தெரில ரோட்ல ஆக்ஸிடெண்ட்ல இறந்து போற ஒவ்வொருத்தர பாக்கும்போது எனக்கு இதே நினைப்பு தான் வரும். ஆண்களோட கோபம், ஆணவம், அலட்சியம், அவசரம் இது எல்லாம் எப்படி பெண்களோட வாழ்க்கையில விளையாடுது, எப்படி அவர்களோட வாழ்க்கையை வாழவிடாம செய்யிதுங்குறத நல்ல ஒரு கதைக்களத்தோட சொல்லிருக்க படம் தான் இந்த இறைவி.

படம் ஆரம்பிச்சி கேரக்டர்கள்லாம் அங்கங்க செட்டில் ஆகுற வரை உள்ள ஒரு பதினைஞ்சி நிமிஷம் கொஞ்சம் அருவையா இருக்க மாதிரி இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி அதிகப்பிரசங்கிகள் “மலக்கிடங்கு”ன்னு சொல்றதெல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்குத்தான்.

ஒரு படத்தை இயக்கிட்டு தயாரிப்பாளரோட உள்ள ப்ரச்சனையால அந்தப் படத்த ரிலீஸ் பன்ன முடியாம மன விரக்திலயே ஓவர் குடிக்கு ஆளான இயக்குனரா வர்றாரு S.J.சூர்யா. தரமான நடிப்பு. ஓவரா பேசுற ஒரு புது இயக்குனரப் பாத்து “தம்பி.. பல பேரு கிழிச்சி குப்பை கொட்டுன இடத்துல இப்ப தான் நீ கிழிக்கவே ஆரம்பிச்சிருக்க.. நம்ம பேசக்கூடாது. நம்ம படம்தான் பேசனும்”ன்னு பஞ்ச் அடிக்கும்போதும் சரி, இடைவேளை சீன்ல நல்லா அடிவாங்கிட்டு உக்காந்துருக்கும்போது செம மாடுலேஷன்ல “துப்பாக்கிய எடுத்துட்டு வந்துருப்பேன்.. அவசர சனியன்.. மறந்துட்டு வந்துட்டேன்” ன்னு சொல்றதும் தாறு மாறு.

பல பேர் S.J.சூர்யாவுக்குள் இருந்த நடிகனை கார்த்தி சுப்பராஜ் தட்டி எழுப்பிட்டாருன்னு சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்க. அவருக்குள்ள இருக்க நடிகன் எப்பவுமே முழிச்சிக்கிட்டு தான் இருக்கான். அன்பே ஆருயிரே படத்துல சாஸ் கொட்டுற சீன்லயோ, இல்லை நிலா ஃபோன் பேசிகிட்டு இருக்கும்போது பாதில சூர்யா வந்து “யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த” ன்னு கேக்குக்குற சீன்லயோ நடிக்காத நடிப்ப ஒண்ணும் இறைவில நடிச்சிடல. ஒரே ஒரு சின்ன வித்யாசம் அதுல மீசை தாடியெல்லாம் இல்லாம பாக்க கொஞ்சம் கண்றாவியா இருப்பாரு. இதுல ஆளு பாக்க நல்லாருக்காரு அவ்வளவுதான். நாங்கல்லாம் அ.ஆ வுலயே SJ சூர்யா ஃபேனு.

விஜய் சேதுபதியும் அவரோட கேரக்டர்ல நல்லா பன்னிருக்காரு. க்ளைமாக்ஸ்ல வர்ற ரெண்டு மூணு சீனத் தவற பெருசா பர்ஃபார்மென்ஸ் காட்டுற சீன்னு சேதுபதிக்கு எதுவும் இல்லை. ஆனா அவரோட ரோல கரெக்ட்டா எந்தப் பிசிறும் இல்லாம பன்னிருக்காரு. அவருக்கு ஈக்குவலா அஞ்சலி. சொல்லபோனா சேதுபதிக்கும் மேலயே நல்லா நடிச்சிருக்கு. விஜய் சேதுபதிக்கும் மலர்ங்குற கேரக்டருக்கும் நடக்குற உரையாடல்கள்ல கொஞ்சம் ஆபாசத்த குறைச்சிருக்கலாம். ஃபேமிலியோட போனவங்கள நிச்சயம் நெளிய வைக்கும்.

இவ்வளவு நல்ல பர்ஃபார்மன்ஸ்களுக்கிடையே பாபி சிம்ஹாவ பாக்க கொஞ்சம் மொக்கையா இருக்கு. அதுவும் வழவழ கொழகொழன்னு மண்வாசனை பாண்டியன் மாதிரி பேசுறாரு. அவரு கெட்டப் மாத்தி நடிச்சாதான் பாக்குற மாதிரி இருக்கும்போல. அவர் அவராவே நடிச்சா கொஞ்சம் கடினம் தான். கோ-2 பாத்தவங்களோட நிலமை எப்டி இருந்துருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. ஆனாலும் ரொம்ப மோசம்னுலாம் சொல்லிட முடியாது.

படத்துல இன்னொரு மொக்கையான விஷயம் பாடல்கள். சன் டிவிலயும் இசையருவிலயும் 500 தடவ போட்டதால “கண்ணப்பாத்து சிரிச்சா” ன்னு SJ சூர்யா ஆடுற பாட்டு கொஞ்சம் கேக்குற மாதிரி இருக்கு. மத்தபடி எல்லாம் மொக்கை. பாட்ட இன்னும் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம். BGM ஓகே.

கார்த்திக் சுப்பராஜ ரெண்டு விஷயத்துக்கு பாராட்டியாகனும். ஒண்ணு மூணு படங்களையுமே மூணு வெவ்வேறு Genre ல தெரிவு செய்து இயக்கியதுக்கு. இன்னொன்னு மூணு படங்களையுமே நல்ல தரமான படங்களா கொடுத்ததுக்கு. பீட்சா, ஜிகர்தண்டா படங்களைப் போலவே அவர் சொல்ல வந்த விஷயத்தை, தெளிவா எந்த காம்ப்ரமைஸும் பன்னிக்காம தரமான வகையில சொல்லிருக்காரு. விஜய்சேதுபதி கேரக்டரோட தன்மைய விளக்குறதுக்கு முதல்லயே ஒண்ணு ரெண்டு சீன் வச்சிருக்கலாம். இண்டர்வல் காட்சியைப் பாத்தப்புறம் தான், விஜய் சேதுபதி SJ. சூர்யாவுக்காக இதெல்லாம் பன்னுவாரான்னு தோணுது.

கொடுமை என்னன்னா படத்துல ஒரு தயாரிப்பாளர் கேரக்டர தப்பா காமிச்சிருக்காங்கன்னு ஒரு காரணத்த சொல்லி அதோட இன்னும் சில பழைய கதைகளை சேத்து விட்டு தயாரிப்பாளர்கள்லாம் சேந்து இவர் மேல ஆக்‌ஷன் எடுக்கப் போறாங்கலாம். ஏன்யா சினிமான்னா என்னன்னு தெளிவா தெரிஞ்சி அதுலயே ஊரிக்கிடக்குற நீங்களே, தப்பான ஒரு தயாரிப்பாளர் கேரக்டர படத்த வச்சிட்டான்னு ஆக்‌ஷன் எடுக்குறீங்கங்கும் போது “எங்க ஜாதிய பத்தி படத்துல தப்பா காமிச்சிருக்கீங்க படத்த தடை பன்னுங்கன்னு” ன்னு எதோ தமிழ்நாட்டோட கடைக்கோடில இருக்க ஒரு ஜாதி அமைப்பு உங்க படம் மேலயெல்லாம் கேஸ் போடுறதுல எந்த தப்பும் இல்லை. இது ”வெறும் சினிமா” ங்குறத முதல்ல சினிமாவுல இருக்க நீங்க உணருங்க. அப்புறம்தான் மத்தவங்க உணருவாங்க.


ஒரே மாதிரி கதைகள வச்சி பாலா எடுக்குற ஆகாவளிப் படங்களையெல்லாம் தூக்கி வைச்சி ஆடுற சிலருக்கு இந்தப் படம் ஏன் புடிக்கலைன்னு தெரியல.  என்னைப் பொறுத்த வரை இறைவி, கார்த்திக் சுப்பராஜோட மற்றொரு தரமான படைப்பு. கண்டிப்பா பாருங்க. நிச்சயம் ஒரு impact ah குடுக்கும்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

KaviIni Imaya said...


very weel said Siva.

Anonymous said...

https://www.facebook.com/anniyantou/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...