Monday, March 27, 2017

என்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்!!!


Share/Bookmark
நம்மோடா பார்க்குற லிஸ்டுலயே இல்லாத படம்.. விஜயகாந்த் மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது “இது என்ன கையில வந்து மாட்டுது”ன்னு மைக் ஒயர் அதுவா வந்து மாட்டுற மாதிரி பழைய நண்பர் ஒருவரை சந்திக்கப் போன போது வந்து மாட்டுனது தான் இந்த எங்கிட்ட மோதாதே. 

”கட்டவுட் வரையிறது தான் என்னோட தொழில்… நா ரஜினிய வரைவேன்.. என்னோட நண்பன் கமல வரைவான்.. நாங்க வரையிற” ன்னு நட்ராஜோட வாய்ஸ் ஓவர்ல துவங்குற படத்துல முதல் காட்சிலயே, பொல்லாதவன், பருத்தி வீரன் லெவல் எஃபெக்ட்ட குடுத்துருந்தாங்க. பத்து பதினைஞ்சி ரவுடிங்க கையில அருவா கத்தியோட யாரயோ தேடிக்கிட்டு இருக்க “இந்த கட்டவுட் வரைஞ்சதால என்னோட தலைக்கு கத்தி குறி வச்சிருக்கு.. விடியிறதுக்குள்ள இத முடிச்சாகனும்”ங்குறாரு நட்ராஜ்.  ஆனா படம் முடியும்போது தான் தெரிஞ்சிது “கத்தி குறி வச்சிருக்கது அவரை இல்லை நம்மளன்னு.

1980 கள்ல நடக்குற மாதிரியான கதைக்களம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ்,  ரசிகர்கள் மோதல்ன்னு நல்லாத்தான் ஆரம்பிக்குது படம். ஆனா காட்சிகள் எதுலயுமே எந்த ஒரு அழுத்தமும் இல்லாம ரொம்ப சாதாரணமா கடந்து போய்கிட்டு இருக்கு. ஒரு படம்னா அதோட ஒவ்வொரு காட்சியும் கதைக்கு சம்பந்தமாதாக, பின்னால சொல்லப்போற எதோ விஷயத்த நேரடியாவோ மறைமுகமாவோ வெளிப்படுத்துற மாதிரியானதாக இருக்கனும்.

ஆனா இங்க சில காட்சிகள்லாம் எதற்காக வச்சாங்கன்னே தெரியல.  உதாரணமா நட்ராஜ் அவரோட நண்பர் ராஜாஜிய விட படம் வரையிறதுல ரொம்ப திறமைசாலியா காமிக்கிறாங்க. ஆனா அது படத்தோட கதைய எங்கயுமே பாதிக்கல. அப்படிக் காட்ட வேண்டியதுக்கான எந்த அவசியமும் கதையில இல்ல.
நட்ராஜ்-ராஜாஜி நட்பும் ரொம்ப சிறப்பால்லாம் காமிக்கப்படல. நட்ராஜ்-சஞ்சிதா, ராஜாஜி-பார்வதி நாயர் காதலும் ஒழுங்கா காமிக்கப்படல. ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டையையும் சரி, கொண்டாட்டங்களையும் சரி ரொம்ப உணர்வுப் பூர்வமாகவும் காமிக்கல. 

கடைசில ரசிகர்கள்தான் பெரியவங்க.. அவர்கள் நினைச்சா அரசியல் மாற்றத்த கொண்டு வரமுடியும்ங்குற விஷயத்த சொல்லத்தான் இயக்குனர் சுத்திச் சுத்தி கதை எழுதிருப்பாரு போல.

நாயகன், மனிதன் பட ரிலீஸ், RMKV ஸ்ரீதேவி விளம்பரம், பழைய மாடல் புல்லட், டேப் ரெக்கார்டர் ன்னு 1980 to 90 ah படத்துல கொண்டு வர முயற்சி செஞ்சிருக்காங்க. நட்ராஜூம் ராஜாஜியும் நார்மலாக இருக்காங்க. ஆனா சுத்தி உள்ளவங்கள்ளாம் wig ah வச்சிக்கிட்டு இன்று போய் நாளைவா பாக்யராஜ் கெட்டப்புல இருக்காங்க. ஒப்பனைகள்ல இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.

படத்துக்கு இரண்டு பெரிய ப்ளஸ் ராதாரவியும், நட்ராஜூம். ராதாரவி வழக்கம்போல பட்டையைக் கிளப்பிருக்காரு. மருது படத்துல ராதாரவி பன்ன அதே கேரக்டர் இந்தப் படத்துலயும். நட்ராஜூக்கும் நல்ல ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்.. ஆனா அவரு செலெக்ட் பன்ற கதைகள்லாம் கப்பியா இருக்கு. இப்ப அவர் நடிச்சிட்டு இருக்கதெல்லாம் பாத்தா, எதாவது நல்ல கதைங்க அவருக்கே தெரியாம அவருக்கு வந்து மாட்டுனாதான் உண்டு போல.

சஞ்சிதா ஷெட்டியயும் பார்வதி நாயரையும் கண்கொண்டு பாக்க முடியல. நல்ல புள்ளைங்களா ரெண்ட புடிச்சி போட்டுருக்கலாம். வில்லனாக வரும் விஜய் முருகன் ஆள் மிரட்டலா இருக்காரு.. ஆனா மிரட்டுற மாதிரி காட்சிகள்தான் ஒண்ணும் இல்லை. அங்கங்க சிலப் பல ரெட்டை அர்த்த வசனங்கள அள்ளி தெளிச்சி விட்டுருக்காங்க.

மொத்தப் படத்துலயும் நல்ல காட்சிகள்னு ஒண்ணு ரெண்ட சொல்லலாம். குறிப்பா ராதாரவியோட படம் ரிலீஸ் பன்றதுக்காக நட்ராஜ் நேரடியா பேசுற காட்சி. (ட்ரெயிலர்லயே வரும்) முதல் பாட்டுல கொஞ்சம் CG யெல்லாம் செஞ்சி நல்லா பன்னிருந்தாங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால “லவ்வுன்னாலே ஃப்ரெஷ் தான் ஜி” ன்னு சொல்லுவாறே… அவரோட ஒரு சில ஒன் லைன் காமெடிகள் நல்லாருந்துச்சி.

ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா படம் சூப்பரா இருந்துச்சின்னு சொல்ல முடியலன்னாலும் கரகரன்னு கழுத்தல்லாம் அறுக்கல. அதுபாட்டுக்கு இருந்த இடம் தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு.

மொத்தத்துல பாக்கலாம்னுலாம் நா சொல்லமாட்டேன். “நல்லாருந்தா நல்லாருங்க” ன்னு கவுண்டர் ஆசீர்வாதம் பன்ற மாதிரி பாக்குறதுன்னா பாத்துக்குங்க. கம்பெனி எதற்கும் பொறுப்பாகாது. 



Saturday, March 25, 2017

KATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்!!!


Share/Bookmark
தமிழ்ப் படங்களும் தெலுங்குப் படங்களும் கிட்டத்தட்ட ஒரு தாய் மக்களைப் போலத்தான். கொஞ்சம் லோக்கலா சொல்லப்போனா ஒரே குட்டையில ஊறுற மட்டைங்க. பெரும்பாலும் தமிழ் தெலுங்கு திரைப்படங்களோட கதைக்களங்களும் உருவாக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும். தமிழ்ப் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆவதும் தெலுங்குப் படங்கள் தமிழில் ரீமேக் ஆவதும் இன்னிக்கு நேத்து நடக்குற விஷயம் இல்லை. ரஜினியின் பல ஹிட் படங்கள் சிரஞ்சீவியாலயும், சிரஞ்சீவியோட சில ஹிட் படங்கள் ரஜினியாலயும் ரீமேக் செய்யப்பட்டிருக்கு. ஒரு கட்டத்துல ரஜினிக்கும் கமலுக்கும் இரண்டு மாநிலங்கள்லயுமே ரசிகர்கள் அதிகரிக்க, அவர்களோட படங்கள் தமிழ்ல ரிலீஸ் ஆகும்போதே நேரடியா தெலுங்குலயும் டப்பிங் பன்னப்பட்டு ரிலீஸ் ஆகிடுறதால அவங்க படங்கள இப்ப ரீமேக் செய்யிற வாய்ப்பு இல்லை.

அதுமட்டும் இல்லாம தெலுங்கில் டப்பிங் படங்களுக்கும் கிட்டத்தட்ட நேரடி தெலுங்குப் படங்களுக்கு இருக்க அளவு ஓப்பனிங் இருக்கும். ஆனா நம்மூர்ல டப்பிங் படங்கள அம்மஞ்சல்லிக்கு மதிக்க மாட்டோம். (அம்மன், அருந்ததி போன்ற ஒரு சில படங்களைத் தவிற) இப்ப ரஜினி கமல் மட்டுமில்லாம சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி போன்றவங்களோட டப்பிங் படங்களுக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு. இவங்களோட படங்களுக்கு இருக்க வரவேற்பு அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இன்னும் ஆந்திராவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதுக்கு சிறந்த உதாரணம் தான் இந்த காட்டமராயுடு.

என்னய்யா இவன் சம்பந்தம் இல்லாம பேசுறானேன்னு பாக்குறீங்களா? இருக்கு. தல அஜித் நடிச்ச வீரம் படத்தோட ரீமேக் தான் இந்தப் படம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா வீரம் படமே ”வீருடு ஒக்கடே” (Veerudokkade) ங்குற பேர்ல ஏற்கனவே ஆந்த்ராவுல ரிலீஸ் ஆன படம். ”கண்டிப்பா நம்மாளுக பாத்துருக்க மாட்டாய்ங்க”ன்னு ஆந்த்ரா மக்கள் மேல நம்பிக்க வச்சி பவன் கல்யான் திரும்ப அந்தப் படத்த ரீமேக் பன்றாருன்னா நிலமைய யோசிச்சுக்குங்க.  

என்னைப் பொறுத்தவரை இதுவரைக்கும் அஜித் குடுத்த ஒரு complete எண்டர்டெய்னர்ன்னா அது வீரம் தான். மங்காத்தாவுல கூட ப்ரேம்ஜி போர்ஷன்லாம் அறுக்கும். ஆனா வீரத்துல ஆக்‌ஷன் , காமெடி செண்டிமெண்டுன்னு எல்லாத்தயும் சரியான கலவையில, எந்த இடத்துலயுமே போர் அடிக்காத மாதிரி குடுத்துருந்தாங்க. வீரத்த நம்ம பாக்கும்போதே அது தெலுங்கு ஆடியன்ஸ்கான படம்னுதான் தோணும். ஏன்னா அது தெலுங்குக்கு ரொம்ப பழக்கப்பட்ட கதை. மொழாம்பழத்துக்கு மூக்கு வச்ச மாதிரி ஒவ்வொருத்தனும் ஆள் சைஸூக்கு கத்தியத் தூக்கிட்டு வந்தாய்ங்கன்னாலே அது தெலுங்குப் படம் தான். சரி இப்ப காட்டமராயுடு எப்டி இருக்குன்னு பாப்போம்.

ரிமேக்குங்குறதால அப்டியே ஜெயம் ராஜா மாதிரி படத்த எடுக்காம கொஞ்சம் கதைய மாத்தி எடுப்போமேன்னு டைரக்டர் முயற்சி பன்னிருக்காப்ள. அதுக்கு முக்கிய என்னன்னா வீரம் படத்துல வர்ற சில காட்சிகள் ஏற்கனவே சில வந்த சில தெலுங்குப் படங்கள்ல ஆட்டையப் போட்டது. அதனால அப்டியே எடுக்க முடியாம அப்டி இப்டி மாத்தி விட்டுருக்காய்ங்க.   ஒரு சில கேரக்டர்கள நீக்கிருக்காங்க. ஒரு சில புது கேரக்டர்கள கொண்டு வந்துருக்காங்க. அங்கதான் கொஞ்சம் ப்ரச்சனையே. வீரம்ல எல்லா கேரக்டர்களும் கரெக்ட்டா பயன்படுத்தப்பட்டு, படத்தோட ஃப்ளோ நல்லாருக்கும். இங்க கேரக்டர்களயும், அந்த கேரக்டர்களோட characteristics அயும் மாத்திட்டதால செகண்ட் ஹாஃப்ல படம் தத்தளிக்கிது.

இண்ட்ரோ சீன் தாறு மாறா எடுத்துருந்தானுங்க. ஸ்லோமேஷன்ல வச்சி அந்த “ராயுடூடூடூடூ”ங்குற BGM ல பவன் வந்து chair ல உக்காரும்போது பயங்கரமா இருந்துச்சி. வில்லன் ஒருத்தன் வந்து “டேய் நா இந்தியா ஃபுல்லா வியாபாரம் பன்றவன்… உன்ன மாதிரி ஊருக்கு ஒரு ராயுடுவப் பாக்குறவன்”ம்பான்… எட்டி அவன் மூஞ்சில ஒரு உதை விட்டுட்டு “ஊருக்கு ஒரு ராயுடு இருப்பான்… ஆனா காட்டமராயுடு ஒரே ஒருத்தந்தான்” ன்னுட்டு போவாரு. இதயும், அந்த intro சாங்கையும் பாத்துட்டு சிலிர்த்துப் போயி சில்லரையெல்லாம் வீசி எறிஞ்சேன். ஆனா அதுக்கப்புறம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ஒட்டஞ்சத்திரம் விநாயக்கம் கேரக்டர்ல இருந்த உயிரோட்டம் காட்டமராயுடு கேரக்டர்ல இல்லை. தம்பிகளுக்காக உழைச்சு நரைச்ச தலை.. கல்யாணமே பன்னக்கூடாது பொண்ணுங்கன்னாலே ஆகாதுங்குற பாலிஸி… இடைவேளையில ”இதான் நான்… இதான் என் வாழ்க்கை”ன்னு சொல்றப்போ இருக்க ஒரு கெத்து, “நீங்க தாடியோட அழகா இருந்தீங்க… தாடி இல்லாம ரொம்ப அழகா இருக்கீங்க”ங்குறப்போ இருந்த மகிழ்ச்சினு நிறைய விஷயம் காட்டமாரயுடுல  மிஸ்ஸிங்.
DSP ah நம்ம கிண்டல் பன்னிக்கிட்டே இருக்கோம். ஆனா  DSP இல்லாத குறை இந்தப் படம்பாக்குறப்போதான் தெரிஞ்சிது. அந்த Mass BGM தான் வீரத்தோட ஒரு முக்கியமான ப்ளஸ்ஸே.. இதுல அனூப் ரூபன்ஸ் நல்லாதான் பன்னிருகாப்ள.. ஆனா அந்த ஃபீல் வரல.ஒரு சில காட்சிகள் தமிழை விட கொஞ்சம் பெட்ட்ராவே எடுத்துருக்காங்க. Intro scene, intro song, ஒரு சில காமெடிக் காட்சிகள், பவன் சுருதிகிட்ட லவ்வ சொல்றா சீன்னு சிலவற்றை சொல்லலாம்.

தெலுங்கு படங்கள்ல வசனங்கள் எப்பவுமே ஸ்பெஷல். ஒரு சாதாரண காட்சிக்கு கூட ரொம்ப மெனக்கெட்டு எழுதுவானுங்க. கேக்கவும் நல்லாருக்கும். ஒரு படத்துல பாலைய்யா “ டேய்.. அடிச்சேன்னு வைய்யி… உன் மூணு தலை முறை சொத்த வித்தாலும் ஆஸ்பத்திரி செலவுக்கு பத்தாது”ம்பாறு. ஆத்தாடி.. ரவிதேஜா ஒருபடத்துல “டேய். நான் கேஷுவலா அடிச்சேன்னாலே எல்லாரும் casualty வார்டுக்குப் போயிருவீங்க”ன்னுவாப்ள… (எங்கடா உக்காந்து எழுதுறீங்க இதெல்லாம்)… காட்டமாராயுடுல அந்த அளவுக்கு மெனக்கெடல்லாம் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிற மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம்.

ஒரு காட்சில பவன் ஒரு கோயில்ல நிக்கும்போது கால் இல்லாத ஒருத்தர் வந்து பிச்சை கேப்பார். உடனே இவரு பையில இருக்க காசெல்லாம் எடுத்து குடுத்து அனுப்புவாரு. அப்புறம் நாசர் வந்து “அவனுக்கு ரெண்டு காலும் இருக்கு.. உங்கள ஏமாத்திட்டான்”ம்பாறு. அப்பவும் பவன் சிரிச்சிக்கிட்டே இருக்க நாசர் “உங்கள ஏமாத்திட்டான் உங்களுக்கு கோவம் வரலயான்னு கேப்பாரு. அதுக்கு பவன் “கால் இல்லைன்னு நினைச்சி உதவி பன்னுனேன்.. இப்ப அவனுக்கு கால் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சந்தோஷம்தானே படனும்… ஏன் கோவப்படனும்பாறு.. புல்லரிச்சிருச்சி.

பவன் ஆளு செமை கெத்தா இருக்காரு… அவருக்கே உரிய அந்த ஸ்டைல் மேனரிசம்லாம் சூப்பர். படத்த சிங்கிளா தூக்கி நிறுத்துறாரு. அவருக்கு தம்பிங்களா நாலு மொக்கைப் பீசுங்களப் புடிச்சி போட்டுருக்கானுங்க. கண்றாவியா இருந்துச்சி. அதவிடக் கொடூரம் சுருதி… பாட்டுல அதுபோட்டுருக்க காஸ்டியூமுக்கும் அதுக்கும் தாரை தப்பட்டையில வரலட்சுமி கரகாட்டம் ஆடுற கெட்டப் மாதிரியே இருந்துச்சி. 

பாடல்கள்லாம் சூப்பர். ஆனா என்ன சூப்பரா போட்டாலும் நம்ம பவன் சும்மாதான் நிப்பாரு. தெலுங்குல டான்ஸ் ஆடத்தெரியாத ரெண்டு ஹீரோக்கள் பவனும், மகேஷ்பாவும். ஆனா ஒரு சின்ன மூவ்மெண்ட் பன்னாலும் தியேட்டர்ல விசில பறக்குது.

மொத்தத்துல பவனோட போன சர்தார் கப்பர் சிங்குங்குறா காட்டு மொக்கையப் பாத்துட்டு இதப் பாக்குற தெலுங்கு ஆடியன்ஸுக்கு இந்தப் படம் கண்டிப்பா ட்ரீட் தான். ஆனா வீரம் பாத்த நமக்கு இந்தப் படம் வீரத்தை விட எந்த வகையிலயும் பெட்டரா தெரியல. அம்புட்டுத்தேன்.



Tuesday, March 21, 2017

ஆர் கே நகரில் கவுண்டர், அமரன், ப்ரேம்ஜி மற்றும் பலர்!!!


Share/Bookmark
புண்ணாக்குப் பேரவை என்ற கட்சியை ஆரம்பிக்கும் கவுண்டர், சத்யராஜ், செந்தில் மூவரும் சத்யராஜை வேட்பாளராக நிறுத்தி ப்ரச்சாரத்திற்கு செல்கின்றனர். முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்

மீடியாவைக் கடந்து ஆர்.கேநகருக்குள் மூவரும் செல்கிறார்கள்

ஒரு கூட்டம்  ஓட்டுக்கேட்டு வருகிறது... கையில் ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம்... ஒற்றை இலை சின்னத்தில்கொடி

செந்தில் : அண்ணேன்... ராஜ்கிரன் வர்றாரு ராஜ்கிரண் வர்றாரு

கவுண்டர் : என்னது ராஜ்கிரணாங்கடா?

செந்தில் : அங்க பாருங்கண்ணே... மஞ்சப்பைல நடிச்ச ராஜ்கிரண் வர்றாரு...

கவுண்டர் : அடப்பாவி... ரெண்டு பக்கமும் காது ஓரமா நரைச்சிருந் உடனே அது ராஜ்கிரனா.... நல்லா பாருடா... அவருதாண்டா கண்ணீ செல்வம்

சத்யராஜ் : மாம்ஸ்  இர்ர்ர  விட்டுட்டீங்க

கவுண்டர் : நா இர்ர்ரு விடல மாப்ள... டேய் வடை சட்டி மண்டைய நீ எதுவும் விட்டியா?

செந்தில் : ஆத்தா சத்தியமா நா விடலண்ணே..

சத்யராஜ் : அய்யோ மாம்ஸ்.. அவரு பேர்ல வர்ற இர்ர விட்டுட்டீங்கன்னு சொன்னேன்....

(அந்தக் கூட்டம் பக்கத்தில் வருகிறது)

கண்ணீர் செல்வம் சத்யராஜைப் பார்த்து சிரிக்கிறார்

சத்யராஜ் : மாம்ஸ் இவரு என்னப்பாத்து சும்மா சும்மா சிரிக்கிறாரு

கவுண்டர் : யப்பா அவரு வேணும்னே சிரிக்கலப்பா... அவரு மூஞ்சே ப்டிதான்

.செல்வம் : மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் வேறுபாடே இந்த சிரிப்புத்தான்.. விலங்குகளால் சிரிக்கமுடியாது

கவுண்டர் : (செந்திலைப் பார்த்து ) டேய் காட்டேரி வாயா..  கொஞ்சம் சிரி

செந்தில் : ஹாஹாஹா....... ஹீ ஹீ ஹீ........ ஹூ ஹூ ஹூ

கவுண்டர் : இப்ப என்ன சொல்றீங்க
(அப்பொழுதும் கண்ணீர் செல்வம் தே மாதிரி சிரித்தது போல் முகத்தை வைத்துக்கொள்கிறார்)

கவுண்டர் : அடங்கப்பா... இது ஒல நடிப்புடா சாமி... இவரோட இன்னும் கொஞ்ச நேரம் நின்னா நம்ம மூஞ்சும் இப்டிஆயிரும்... ஆள வுடு சாமி

*****



அந்தக் கூட்டம் இவர்களைக் கடந்து செல்லஅடுத்த கூட்டம் அதே போல் கையில் ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட ஃபோட்டோவுடனும் வருகின்றனர்அதே போல் ஒற்றை இலை சின்னக் கொடி

செந்தில் : அய்யோ அண்ணேன்...

கவுண்டர் : என்னடா...

செந்தில் : எண்ணன்னே இன்னொரு குரூப்பு வருது... கையில அதே படம்... அதே கொடி... 

கவுண்டர் : டேய் டேங்கர் கப்பல் மண்டையா... ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள்ன்னு சொல்லுவானுகள்ளஅது இவனுங்கதான்... ஒரு குரூப்பு அந்த ஃபோட்டோவ மக்கள்கிட்ட காமிச்சி ”இவங்க செத்துப் பொய்ட்டாங்க அதுனாலஓட்டுப்போடுங்க” ன்னு கெஞ்சுவான்... இன்னொரு குரூப்பு அதே ஃபோட்டோவக் காமிச்சி “இவங்கள அந்த குரூப்புகொன்னுட்டாங்க... அதனால எங்களுக்கு ஓட்டுப்போடுங்க” ன்னு சொல்லுவான்..ஆனா அந்த ஃபோட்டோவுலஇருக்கவங் சாகும்போது ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து தான் ட்ராமால்லாம் போட்டாங்கன்னு மக்கள் எல்லாருக்கும்தெரியிங்

சத்யராஜ் : மாம்ஸ்... அது என்ன மாம்ஸ் ரெண்டு பேருக்கும் சின்னத்துல ஓரே ஒரு இலை மட்டும் இருக்கு... அதுவும்இலை வேற வேற பக்கம் இருக்கு.

கவுண்டர் : அட அது ஒண்ணு மில்லையப்பா... மொதல்ல ரெண்டு இலைதான் இருந்துச்சி... இவனுங்க ரெண்டு பேரும்ஒரே சின்னத்துக்காக அடிச்சிக்கிட்டு இருந்தானுங்க.... இதப் பாத்த ஜட்ஜ் ஒருத்தரு ரெண்டு இலைக்கு நடுவுல ரெண்டாகிழிச்சி ஒரு பக்கத்த இவனுங்களுக்கும் இன்னொரு பக்கத்த அவனுங்களுக்கும் குடுத்துவிட்டுட்டாரு...

அந்தக் கூட்டம் இவர்களைக் கடந்து செல்ல

கவுண்டர் சத்யராஜைப் பார்த்து

கவுண்டர் : பழ்னிச்சாமி இங்க வா

உடனே அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் “என்னங்க கூப்டீங்களா?” என்கிறார்

கவுண்டர் : நா உங்களக் கூப்டலயே.. என் மாப்ள பழ்னிச்சாமியக் கூப்டேன்

அவர் : என் பேரும் பழ்னிச்சாமிதானுங்க

கவுண்டர் : அப்டீங்களா... உங்க ஊரு?

அவர் : காட்பாடி

கவுண்டர் : .. காட்பாடி பழனிச்சாமியா நீங்க... எம் மாப்ள பாப்பநாயக்கம் பட்டி பழனிச்சாமி

கா.பழனிச்சாமி : ரொம்ப சந்தோசம்.. நீங்க என்ன பன்றீங்க?

கவுண்டர் : நாங்க நேத்து வரைக்கும் சும்மாதான் இருந்தோம்...  இன்னிக்கு காலைலருந்து முழு நேர அரசியல்வாதியாமாறிட்டோம்ஆமா நீங்க என்ன பன்றீங்க?

கா.நானும் போன மாசம் வரைக்கும் சும்மாதான் இருந்தேன்.

கவுண்டர் : இப்ப பிஸி ஆகிட்டீங்களா?

கா.: இல்லைங்க... இப்பவும் அப்டித்தான் இருக்கேன்... ரெசாட்ல ரெஸ்ட் எடுத்தது போக மிச்ச நேரத்துல அப்பப்பதலைமைச் செயலகத்துக்கு பொய்ட்டு வந்துகிட்டு இருக்கேன்.

கவுண்டர் : அத ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?

கா.இது இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல... சரி அத விடுங்க என் சோகம் என்னோட போகட்டும்...மறக்காம நமக்கே ஓட்டுப் போட்டுருங்க

கவுண்டர் : ண்ணா... நாங்களும் ங்கள மாதிரிதாணுங்கண்ணா... ஓட்டு கேட்டுதான் வந்தோம்... நீங்க முடிஞ்சாஎங்களுக்கு ஓட்டுப் போடுங்கண்ணா... தோ...  பாருங்க உங் குரூப்பெல்லாம் வெய்ட் பன்னுது.. போய் ஜாய்ண்பன்னிக்குங்க..அப்டியே எதுக்கும் ராஜினாமா கடிதத்தையும் ரெடி பண்ணி வச்சிக்குங்க… கூடிய சீக்கிரம் தேவைப்படும்
(காட்பாடி சோகமாக நடந்து சென்று கூட்டத்தில் இணைகிறார்)

செந்தில் : அண்ணேன்…. இவருக்கும் முன்னால வந்த கண்ணீர் செல்வத்துக்கும் ஒரு வித்யாசம் இருக்கு… என்னன்னு சொல்லுங்க

கவுண்டர் : நீயே சொல்லு நாயே

செந்தில் : கண்ணீரு நிரந்தர தற்காலிக முதல்வரு… காட்படி தற்காலிக நிரந்தர முதல்வரு….

கவுண்டர்: என்னா கண்டுபிடிப்பு… குட்டிம்மா…. மூஞ்ச இப்புடி பக்கத்துல கொண்டு வா…..துப்ப்…பூ



*****

 இன்னும் சற்று முன்னே செல்கிறார்கள்

கவுண்டர் : மாப்பி... ஒரு முக்கியமான மேட்டர மறந்துட்டோமே...

சத்யராஜ் : சொல்லுங்க மாம்ஸ்

கவுண்டர் : இங்கல்லாம் ஓட்டு வாங்கனும்னா நல்லவங்களா இருந்தா ட்டும் பத்தாது மாப்ள... கைல காசுஇருக்கனும்....

சத்யராஜ் : அய்யோ மாம்ஸ்... வரும்போது பீரோவுல பணத்த மறந்து வச்சிட்டு வந்துட்டேன்... நா வேணா  போய்எடுத்துட்டு வந்துரட்டுமா?

கவுண்டர்:(குஜாலாக ) மாப்ள இந்தப் பண மேட்டர என்கிட்ட சொல்லவே இல்லை... நீ ஜெயிச்சிட்ட... ஆமா எத்தனைலட்சம்..? எத்தனை கோடிஇப்பவே எனக்கு  கூவத்தூர் ரெசார்ட் கண்ணுக்குத் தெரியிதே.... சொல்லு மாப்ள எத்தனைகோடி?

சத்யராஜ் : இருநூத்தி முப்பது ரூவா அம்பது பைசா...

கவுண்டர் : இய்ய்ய்ய்....  என்னது இருநூத்தி முப்பது ரூவா அம்பது காசாஅம்பது பைசால்லாம் செல்லாதுன்னுசொல்லி பல வருசமாச்சிய்யா... இந்த நிக்கிறானே கச்சத்தீவு வாயன்.. இவன் ஒரு வேளை சாப்பாடே 500 ரூவாய்க்குசாப்புடுவான்... நீ வெக்கமில்லாம பிச்சக்காசு 200 ரூவாய பீரோவுல வச்சிட்டு வந்துட்டேன்னு ஃபீல் பன்... போ மாப்ள..உன் மேல வச்சிருந்த மரியாதையே போயிருச்சிய்யா...




அப்ப ஒரு குரூப்பு தாமரை கொடியப் புடிச்சிக்கிட்டு செகப்புக் கலர் காரத் தள்ளிக்கிட்டு  வருது...  (கங்கை அமரன் &ஃபேமிலி)

(கரகாட்டக்காரன் பேக்ரவுண்ட் மீயூசிக்கை ஒலிக்க விடுக)

கவுண்டர் : மாப்ள... இந்தக் கார நா எங்கயோ பாத்துருக்கேனே....

செந்தில் : அண்ணேன் நானும் பாத்துருக்கேன்...

கவுண்டர் :  டேய்... இந்தக் காரப் பாத்த உடனே அடுத்து நீ என்ன கேப்பன்னு எனக்குத் தெரியிங்.. கேட்டே... மகனேஅடுத்த வேளை சோறு திங்க வாய் இருக்காது.

செந்தில் : அட அது இல்லைண்ணே… நீங்க எவ்வளவு பெரிய விஞ்ஞானி
(சத்யராஜ் பொளக்குன்னு சிரிக்கிறார்)

கவுண்டர் மூஞ்சை முறைப்பா வச்சிக்கிட்டு

கவுண்டர் : மேல…

செந்தில் : அட அது இல்லைண்ணே… இத்தனை வருசமாகியும் இந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்காங்கன்னே கண்டுபுடிக்க முடியலையே…. அதான் வருத்தமா இருக்கு

கவுண்டர்: ரொம்ப வருத்தப்படாதடா.. விசித்ரான்னு ஒரு பாட்டுப்பாடுற புள்ளை இருக்கு.. அதுகிட்ட கேட்ட ஒரு வேளை தெரியலாம். ஏன்னா இன்னிக்கு தேதிக்கு யாரு யாரு யார் யார வச்சிருக்காங்குறா விவ்ரமெல்லாம் அந்தப் புள்ளைக்கிட்டதான் இருக்கு

செந்தில் விலாசம்... விசித்ராவோட விலாசம்...

கவுண்டர் பக்கத்தில் கிடந்த கல்லைப் பார்க்க செந்தில் நைசாக நழுவுகிறார்.

(அப்போது கங்கை அமரனைப் பார்த்து)

சத்யராஜ் : மாம்ஸ் அந்தத் தாத்தாவயும் நான் அடிக்கடி பாத்துருக்கேன்....

கவுண்டர் : எங்க?

சத்யராஜ் : வருசா வருசம் மாட்டுப்பொங்லன்னிக்கு வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு

கவுண்டர் : பொங்க சோரு வாங்கித் திங்க வருவாரா?

சத்யராஜ் : இல்ல மாம்ஸ்…  டிவில  பட்டிக்காடா பட்டனமான்னு ஒரு மொக்கை ப்ரோகிராம் நடத்துவாரு

(அந்த குரூப் இவர்களை நெருங்கி வர.... )

கவுண்டர் : என்ன சார்... டிவி ப்ரோகிராமெல்லாம் எதுவும் இல்லயா? இந்தப் பக்கம் வந்துட்டீங்க....

கங்கை அமரன் :   நானும் இந்தத் தொகுதியில் எலெக்ஷன்ல் நிற்கிறேன்...

கவுண்டர் : நிக்கிறது இருக்கட்டும்.. யாரு ஓட்டுப்போடுவா?

கங்கை அமரன் : ஓட்டு என்று கூறியவுடன் எனக்கு ஒரு சம்பவம் ஞாபத்திற்கு வருகிறதுசிறு வயதில் நானும்அண்ணன் இளையராஜாவும் ரு முறை ஓட்டுப்போடச் சென்ற பொழுது

கவுண்டர் : ஓட்டு இல்லைன்னு சொல்லி தொரத்தி விட்டுட்டாங்களா?

கங்கை அமரன் துரத்திவிட்டார்களா என்று சொன்னதும் எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது..நானும்அண்ணனும்...

ப்ரேம்ஜி : யப்பா...  சும்மாருப்பா... அண்ணேன்…மறக்காம....... எங்களுக்கே...... ஓட்டுப்போட்டுருங்க.... ஆங்........ (கையை மடக்கி அவர் மேனரிசத்தை செய்கிறார்)

கவுண்டர் :(பதட்டமாக)அய்யோ பழ்னிச்சாமி.... அந்த சாவிக்கொத்தை எடு.. பையனுக்கு வலிப்பு வந்துருச்சி பாரு....

கங்கை அமரன் : அது வலிப்பு இல்லைங்க... என பையனோட மேனரிசம்....

கவுண்டர் : து.....ப்பூ.... இந் பாருங்க சின்ன வாத்தியம்... தெய்ல்லாம் பக்கத்துல வச்சிக்கிட்டு சுத்தாதீங்க.. எத எப்பகடிச்சி வைக்கும்னே தெரியாது.... நீங்க தனியா போனாக்கூட ஒண்ணூ ரெண்டு ஓட்டு விழலாம்ம்ம்... ஆனாஇதயெல்லாம் கூட்டிக்கிட்டு போனா கஞ்சி தான்....

யமுனை அமரன் : கஞ்சி என்று சொல்லும்பொழுது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறதுசிறு வயதில் நானும்அண்ணன் இளைய ராஜாவும் கஞ்சி குடிக்கும் பொழுது

கவுண்டர் : யப்பா சாமி... தெரியாமக் கேட்டுட்டேண்டா...  இடத்தக் காலி பன்னுங்க... 
மறுபடியும் கரகாட்டக்காரன் மியூசிக்.. அமரன் க்ரூப் அந்தக்  காரைத் தள்ளிக்கொண்டு போகும்போது பின்னால் இருந்துகவுண்டர் )

கவுண்டர் : ஏங்க தாடிக்காரரே... வீட்டுக்குப் போனவுடனே மொதோ வேலையா  மூஞ்சில ஸ்ப்ரே அடிக்கிற அந்த காக்காவலிப்பு தம்பியக் நல் சங்கிலியா பாத்து கட்டிப்போடுங்க.. இதயெல்லாம் சும்மா விடுறது ஆபத்து...

(அவர்கள் சென்றதும்)

செந்தில்  : (கோவமாகஅண்ணேன்...  என் பதவிய நான் ராஜினாமா பன்றேன்...

கவுண்டர் : ஆங்ங்...  கூட அள்ளக்கையா வர்றது பெரிய கவர்னர்  பதவி... அத இவரு ராஜினாமா வேற ன்றாரு...சோத்துக்கு என்ன நாயே பன்னப்போற?

செந்தில் : உங்க கட்சி நடவடிக்கையில எனக்கு உடன்பாடு இல்லை. அதுனால நா என்னோட தொண்டர்கள் ஆதரவோட தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறேன்…

கவுண்டர் : ஆங்.. அப்புடியே கட்சில நாலுகோடி பேரு இருந்தானுங்க… இதுல தொண்டர்கள் ஆதரவு வேற… மொத்தத்துல கட்சில இருந்ததே மூணுபேரு.. அதுலயும் தனிக்கட்சியா? போற போக்குல தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கட்சி ஆரம்பிச்சி, வாட்டிகன்ல போப் எலெக்‌ஷனப்போ அவன் அவனுக்கு அவன் அவனே ஓட்டுப் போட்டுக்குற மாதிரி தமிழ்நாடும் ஆகபோகுது…. ஒழிஞ்சி போங்கடா… மாப்ளா நீ போய் தியேட்டர்ல பழைய எம்.ஜி.ஆர் படத்த ஓட்டி பொழச்சிக்க…. நா பழையபடி நா சைக்கிள் கடைக்கே போயிடுறேன்..

புண்ணாக்கு பேரவை கலைங்கடா…. !!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...